அருணாசலப் பிரதேசத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் கலிகோ புல் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார். அவருக்கு 40 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
அருணாசலப் பிரதேசத்தில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்ததையடுத்து, அந்த மாநிலத்தின் 8-ஆவது முதல்வராக கலிகோ புல், கடந்த 19-ஆம் தேதி பதவியேற்றார்.
இந்நிலையில், அருணாசலப் பிரதேச சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை கூட்டவும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவும் மாநில ஆளுநர் ஜோதிபிரசாத் ராஜ்கோவா உத்தரவிட்டார். இதையடுத்து இன்று பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.
முகல்வர் கலிகோ புல்லுக்கு ஆதரவாக 27 காங்கிரஸ் அதிருப்தி உறுப்பினர்களும், 11 பாஜக உறுப்பினர்களும், இரு சுயேச்சை உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
நேற்று வரை முன்னாள் முதல்வர் நபம் துகிக்கு ஆதரவு அளித்த 9 காங்கிரஸ் உறுப்பினர்கள் இன்று முதல்வர் கலிகோவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். காங்கிரஸ் உறுப்பினர்கள் 17 பேர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
இதையடுத்து முதல்வர் கலிகோ நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தலைவர்கள், திரைப் பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படங்கள்
சூரியின் மண்டாடி படப்பிடிப்பு நிறைவு! சிறப்பு விடியோ!

தலைவர்கள், பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படங்கள்

சாய் சுதர்சன் அதிரடி சதம்: பெங்களூருக்கு 206 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


