பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மும்பையைச் சேர்ந்த பொறியாளரை கருணை அடிப்படையில் விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அவரது பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.
மும்பையைச் சேர்ந்த 31 வயதாகும் பொறியாளர் ஹமீத் அன்சாரி, பாகிஸ்தான் நீதிமன்றத்தால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்திய - பாகிஸ்தான் அரசுகள் ஒன்றிணைந்து, அரசியல் விவகாரங்களுக்கு அப்பாற்பட்டு, எனது மகனை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஹமீத் அன்சாரியின் தாய் ஃபௌஸியா அன்சாரி கோரிக்கை வைத்துள்ளார்.
சமூக தளத்தின் மூலமாக நட்பான தனது பெண் தோழியை சந்திப்பதற்காக ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 2012ம் ஆண்டு பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகக் கூறி ஹமீத் அன்சாரி கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மகனைக் காணாமல் தேடி வந்த பெற்றோர், கடந்த ஜனவரி 13ம் தேதிதான், அவர் பாகிஸ்தான் ராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் செய்தியை அறிந்தனர்.
ஆனால், அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது குறித்து அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தோம். ஆனால் நாங்கள் நம்பிக்கையை கைவிடவில்லை. கடவுளை நம்புகிறோம். மத்திய அரசு இது குறித்து நடவடிக்கை எடுத்து, உடனடியாக எங்களது மகன் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புவதாகவும் அவரது தாயார் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜன நாயகன் லீக்: படத்தொகுப்பாளர் இடைநீக்கம்!

ஜியோ பிளாட்ஃபார்ம் லாபம் 13% உயர்வு!

பாஜகவில் இணைந்த 3 எம்பிக்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்! ஆம் ஆத்மி வலியுறுத்தல்!

அந்நியச் செலாவணி கையிருப்பு 70,330.8 கோடி டாலராக உயர்வு!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


