8 மாநில இடைத்தேர்தல்: பாஜகவுக்கு சாதகம்; காங். பின்னடைவு
இந்தியா முழுவதும் நடைபெற்ற எட்டு மாநில இடைத் தேர்தல்களில் பெரும்பாலான இடங்களில் மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது.


இந்தியா முழுவதும் நடைபெற்ற எட்டு மாநில இடைத் தேர்தல்களில் பெரும்பாலான இடங்களில் மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்றள்ளது. பல இடங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்துள்ளது.
மகராஷ்டிரம், கர்நாடகம், மத்திய பிரதேசம், உத்ர பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் காலியாக இருந்த பேரவைகளுக்கான தேர்தல் அண்மையில் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்பட்ட நிலையில் பெரும்பாலான இடங்களில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது.
மகாராஷ்டிரம்: மும்பை புறநகர் பகுதியில் உள்ள பல்ஹர் பேரவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும் பாஜக அரசுடன் கூட்டணியில் இருக்கும் சிவசேவனை வெற்றி பெற்றது. இந்தத் தேர்தலில் பாஜக போட்டியிடவில்லை. பல்ஹர் தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரைவிட 18,948 வாக்குகள் பெற்று சிவசேனை வேட்பாளர் அமித் கோடா வெற்றி பெற்றார்.
மத்தியப் பிரதேசம்: சத்னா மாவட்டத்தில் உள்ள மைஹர் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் மணீஷ் படேலைவிட அதிக வாக்குகள் பெற்று பாஜக வேட்பாளர் நாராயண் திரிபாதி வெற்றி பெற்றார்.
உத்தரப் பிரதேசம்: பிரச்சனைக்குரிய முசாஃபர்நகர் தொகுதியில் பாஜகவும், சஹரன்பூர் மாவட்டம், தியோபந்த் தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றன.
ஃபைஸôபாத் மாவட்டம், பிகாபூர் தொகுதியில் ஆளும் சமாஜவாதி கட்சி வேட்பாளர் ஆனந்த் சென் யாதவ் கைப்பற்றினார்.
பிகார்: மதுபானி மாவட்டம், ஹர்லகி பேரவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி வெற்றி பெற்றது. இந்தத் தோல்வி, ஆளும் மதசார்பற்ற மகா கூட்டணிக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.
பஞ்சாப்: கதூர் சாஹிப் தொகுதியில் ஆளும் சிரோமணி அகாலி தளம் கட்சி வெற்றி பெற்றது. இந்தக் கட்சியுடன் பாஜக கூட்டணி வைத்துள்ளது.
தெலங்கானா மாநிலம், நாராயண்கெட் தொகுதி இடைத்தேர்தலில் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியும், திரிபுரா மாநிலம், பீர்கஞ்ச் தொகுதி இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வெற்றி பெற்றன.
கர்நாடகம்: மூன்று பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக 2 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் ஆளும் கட்சியான காங்கிரஸிற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...