சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி பலியான 9 வீரர்களின் உடல்களையும் தில்லி கொண்டு வர தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ராணுவ மீட்புக் குழுவின் கடும் முயற்சிக்குப் பின், சியாச்சின் மலையில் இருந்து மலை அடிவாரத்தில் உள்ள ராணுவ முகாமுக்கு 9 வீரர்களின் உடல்களும் இன்று கொண்டு வரப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பர்தாபுர் கிராமத்தில் உள்ள ராணுவ முகாமுக்கு உடல்கள் கொண்டு வரப்பட்டு, அங்குள்ள காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மிக மோசமான வெப்பநிலை காரணமாக ஹெலிகாப்டர்களை இயக்க முடியாததால், உயிரிழந்த வீரர்களின் உடல்களை தில்லி கொண்டு வருவதில் சிக்கல் நீடித்து வருகிறது.
ஹெலிகாப்டர்கள் மூலம் உடல்களைக் கொண்டு வர வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட மூன்று முயற்சிகளும் தோல்வி அடைந்தன.
இன்று பருவநிலை ஒத்துழைக்கும் பட்சத்தில், 9 வீரர்களின் உடல்களும் ஞாயிற்றுக்கிழமை லேஹ் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து தில்லி கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருப்பதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 88.55 % வாக்குப்பதிவு

வாக்கு செலுத்தியதை விடியோ எடுத்து வெளியிட்ட இருவா் மீது வழக்குப் பதிவு

வாக்கு எண்ணும் மையங்களிலிருந்து 3 கி.மீ சுற்றளவிற்கு தானியங்கி வானூா்திகள் பறக்க தடை

நான்குனேரி தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


