முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

கொல்கத்தாவில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து

கொல்கத்தாவின் டன்லப் பகுதிக்கு அருகே இருந்த பிளாஸ்டிக் கிடங்கு ஒன்றில் இன்று முற்பகல் பயங்கர தீ விபத்து நேரிட்டது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:31 pm

PTI

கொல்கத்தாவின் டன்லப் பகுதிக்கு அருகே இருந்த பிளாஸ்டிக் கிடங்கு ஒன்றில் இன்று முற்பகல் பயங்கர தீ விபத்து நேரிட்டது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இன்று முற்பகல் 11.30 மணியளவில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் 25க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டன.

மக்கள் தொகை நெருக்கம் கொண்ட பகுதியில் பயங்கர தீ விபத்து நேரிட்டது அப்பகுதியில் மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தியது.

தீ விபத்துக்கான காரணமோ, உயிரிழப்பு குறித்தோ இதுவரை எந்த தகவலும் இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.