காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் மீதான நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. அதேநேரத்தில், தலைவர்கள் வழக்கு விசாரணையின் போது நேரில் ஆஜராகுவதிலிருந்து விலக்கு அளித்து உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
"நேஷனல் ஹெரால்டு' வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்ற விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுக்களை இன்று உச்ச நீதிமன்றம் விசாரித்தது.
அவர்களது மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், காங்கிரஸ் தலைவர்கள் விசாரணைக்கு நேரில் ஆஜராகுவதிலிருந்து விலக்கு அளித்து அனுமதி வழங்கியது. எனினும், விசாரணை நீதிமன்ற நீதிபதி அழைக்கும்பட்சத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர்.
ஆனால், விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறும் குற்றவியல் வழக்கை தள்ளுபடி செய்ய மறுத்துவிட்டனர்.
"நேஷனல் ஹெரால்டு' பத்திரிகைக்குச் சொந்தமான "அசோசியேட்டட் ஜர்னல்ஸ்' நிறுவனத்தின் சொத்துகளை, "யங் இந்தியன்' என்ற நிறுவனத்தின் மூலமாக, சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மோதிலால் வோரா, ஆஸ்கார் பெர்னாண்டஸ், சாம் பிட்ரோடா, சுமன் துபே ஆகியோர் அபகரித்துவிட்டதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, தில்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் தங்கள் மீதான புகாரையும், அழைப்பாணையும் ரத்து செய்யக் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் சோனியா காந்தி உள்ளிட்டோர் மேல்முறையீடு செய்தனர். அந்த மேல்முறையீட்டு மனுக்களை தில்லி உயர்நீதிமன்றம் கடந்த டிசம்பர் 7ஆம் தேதிநிராகரித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாபநாசம் நாதக வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும்: சீமான்

பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்!

யார் அனுமதி கொடுத்தது? பத்திரிகையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட துணை ஆணையர்!

உலகக் கோப்பை: ஈரானுக்குப் பதிலாக விளையாட டிரம்ப் விடுத்த அழைப்பை நிராகரித்த இத்தாலி!
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


