ஏராளமான முன்னாள் எம்.பி.க்கள் வசித்து வரும் அரசு பங்களாவின் வாடகை பாக்கி மட்டும் ரூ.93 லட்சம் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது.
இதில், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினரும், சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு மாறியவருமான கிரீஷ் குமார் சாங்கியின் வாடகை பாக்கி மட்டும் ரூ.23 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி, எஸ்டேட் இயக்குநரகத்தின் ஆவணங்களில் இந்த தகவல் கூறப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் சுபாஷ் அகர்வால் கொடுத்த மனு மீது இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து சாங்கியிடம் கேட்ட போது, 2010ம் ஆண்டு எனது பதவிக் காலம் நிறைவடைந்ததுமே எண் 7, தல்கடோரா சாலையில் உள்ள அரசு பங்களாவை நான் காலி செய்துவிட்டேன். அதன் பிறகு அது வேறு ஒருவருக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், என் பெயரில்தான் இன்னும் வாடகைப் பாக்கிக் காட்டப்படுகிறது. நான் அதில் குடியிருந்தால் நிச்சயம் வாடகை செலுத்தியிருப்பேன். வேறு யாரோ அதில் குடியிருப்பதால் நான் செலுத்த வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இப்படியாக சுமார் 56 முன்னாள் எம்.பி.க்கள் ரூ.1,969 முதல் ரூ.23.07 லட்சம் வரை வாடகை பாக்கி வைத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாபநாசம் நாதக வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும்: சீமான்

பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்!

யார் அனுமதி கொடுத்தது? பத்திரிகையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட துணை ஆணையர்!

உலகக் கோப்பை: ஈரானுக்குப் பதிலாக விளையாட டிரம்ப் விடுத்த அழைப்பை நிராகரித்த இத்தாலி!
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


