முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

இஷ்ரத் ஜஹான் எல்-இ-டியின் தற்கொலைப் படையைச் சேர்ந்தவர்: ஹேட்லி வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல்

மும்பை காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மும்பையைச் சேர்ந்த இஷ்ரத் ஜஹான் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் தற்கொலைப் படையைச் சேர்ந்தவர் என்று ஹேட்லி வாக்குமூலம் அளித்துள்ளார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:30 pm

PTI

மும்பை காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மும்பையைச் சேர்ந்த இஷ்ரத் ஜஹான் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் தற்கொலைப் படையைச் சேர்ந்தவர் என்று ஹேட்லி வாக்குமூலம் அளித்துள்ளார்.

மும்பையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய டேவிட் ஹெட்லி கைது செய்து செய்யப்பட்டு அமெரிக்காவில் உள்ள சிறையில் வைக்கப்பட்டுள்ளார். பயங்கரவாதி டேவிட் ஹெட்லியிடம் காணொளி மூலம் வாக்குமூலம் பெறுவது இன்று காலை மீண்டும் தொடங்கியது.

அப்போது மும்பை தாக்குதல் குறித்து பல்வேறு உண்மைகளை வாக்குமூலமாக அளித்த ஹேட்லி, போலி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக, இதுநாள்வரை கருதப்பட்டு வந்த மும்பையைச் சேர்ந்த இஷ்ரத் ஜஹான், லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் தற்கொலைப் படையைச் சேர்ந்தவர் என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடந்த 2004ம் வருடம் ஜூன் 15ம் தேதி  மும்பையைச் சேர்ந்த இஷ்ரத் ஜஹான் மேலும் மூவருடன் என்கவுடரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அப்பாவிப் பெண்ணை என்கவுண்டர் என்று சொல்லி காவல்துறையினர் சுட்டுக் கொன்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில், ஐபிஎஸ் அதிகாரி வஞ்சாரா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களது பதவிகளும் பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.