தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

மும்பை தாக்குதலுக்காக தாஜ் ஹோட்டல் மாதிரியை தயாரித்த தீவிரவாதிகள்

மும்பையில் தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக தாஜ் ஹோட்டல் போன்ற மாதிரியை தயாரித்ததாக, டேவிட் ஹெட்லி கூறினார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:29 pm

PTI

மும்பையில் தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக தாஜ் ஹோட்டல் போன்ற மாதிரியை தயாரித்ததாக,  டேவிட் ஹெட்லி கூறினார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த அமெரிக்கரான ஹெட்லி, அமெரிக்க சிறையில் இருந்தபடி காணொலி வாயிலாக மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக மும்பை நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்து வருகிறார்.

அவர் இரண்டாவது நாளாக அளித்த வாக்கமூலம் விவரம்:

கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பாகிஸ்தானின் முஷாராபாத் நகரில் நடைபெற்ற லஷ்கர்-ஏ-தொய்பா கூட்டத்தின் போது மும்பையில் தாக்குதல் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் ஷாஜித் மிர், அபு கஃபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது மும்பை தாஜ் ஹோட்டல் குறித்த தகவல்களை திரட்டுவதற்கு எனக்கு உத்தரவிடப்பட்டது.

தாஜ் ஹோட்டலில் நடைபெறவிருந்த இந்திய பாதுகாப்புத் துறை விஞ்ஞானிகள் கூட்டத்தின் போது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டது. எனினும், அக்கூட்டம் நடைபெறவில்லை. இதற்காக அவர்கள் தாஜ் ஹோட்டல் மாதிரியை செய்து வைத்திருந்த்தனர்.

லஷ்கர்-ஏ-தொய்பா இயக்கத்தில் இணைந்த பிறகு முதன்முறையாக கடந்த 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி மும்பை வந்தேன். அப்போது பல இடங்கள் குறித்த புகைப்படங்களையும், விடியோக்களையும் பதிவு செய்தேன்.

பின்னர், 2008 ஆம் ஆண்டு மும்பை வந்த நான், தாஜ் ஹோட்டல், கடற்படை தளம், மகாராஷ்டி மாநில போலீஸ் தலைமையகம், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் ஆகிய இடங்களை விடியோ எடுத்தேன்.  ஜிபிஎஸ் கருவி மூலம் நான் சென்ற இடங்கள் அனைத்தையும் துல்லியமாக பதிவு செய்தேன்.

பின்னர் பாகிஸ்தான் திரும்பிய நான், அனைத்து தகவல்களையும் ஷாஜித் மிர், அபு கஃபா ஆகியோரிடம் அளித்தேன் என்றார் ஹெட்லி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.