தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர்கள் பத்திரமாக உள்ளனர்: சுஷ்மா

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளால் ஓராண்டுக்கு முன்னதாக கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் பத்திரமாக உள்ளதாக மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறினார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:28 pm

PTI

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளால் ஓராண்டுக்கு முன்னதாக கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் பத்திரமாக உள்ளதாக மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறினார்..

இராக் நாட்டின் மோசூல் நகரிலிருந்து கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 39 இந்தியர்கள் கடத்தப்பட்டனர்.

இந்நிலையில் அவர்களின் குடும்பத்தினரை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்துப் பேசினார்.

கடந்த மாதம் 17, 18 தேதிகளில் இஸ்ரேல், பாலஸ்தீனம் நாட்டுக்கு பிராயணம் மேற்கொண்ட சுஷ்மாவிடம், அந்நாட்டு அதிகாரிகள், கடத்தப்பட்ட இந்தியர்கள் பத்திரமாக இருப்பதாக உறுதியளித்தனர்.

இதை கடத்தப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தெரிவித்த அமைச்சர், அவர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பதாக கூறினார்.

இராக்கில் இந்தியர்கள் கடத்தப்பட்ட பிறகு ஒன்பதாவது முறையாக அமைச்சர் சுஷ்மா, அவர்களது குடும்பத்தினரை சந்தித்து பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.