சபரிமலை கோயிலுக்குள் மாதவிலக்கு கால பெண்கள் நுழைவதற்கான தடையை ஆதரிப்பதாக கேரளத்தை ஆளும் காங்கிரஸ் அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமான பத்திரத்தில் தெரிவித்துள்ளது.
கேரள மாநிலத்தில் மலைப் பகுதியில் அமைந்துள்ள சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் சென்று வழிபாடு நடத்துவதற்கு அனுமதி வழங்க வலியுறுத்தி இளம் வழக்குரைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, என்.வி.ரமணா ஆகியோர் இதுகுறித்து கேரள மாநில அரசு பிரமான பத்திரம் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு தாக்கல் செய்திருந்த மனுவில், சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் நுழைவதற்கு தடை என்பது மத ரீதியான பிரச்னை. அங்கு செல்லும் பக்தர்களின் மத வழிபாட்டு முறையை காப்பாற்றுவது ஓர் அரசின் கடமையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம்:
கடந்த 2007 ஆம் ஆண்டு, சபரிமலை கோயிலுக்குள் பெண்களும் சென்று வழிபடலாம் என முந்தைய கம்யூனிஸ்ட் அரசு தாக்கல் செய்திருந்த பிரமான பத்திரம் திரும்பப்பெறப்படுகிறது.
சபரிமலையை பொருத்தவரையில் அதன் நிர்வாக்தை திருவாங்கூர் தேவஸ்தான வாரியம், 1950 ஆம் ஆண்டைய திருவாங்கூர்-கொச்சி இந்து மத நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. அந்த சட்டம், வழக்கத்தின்படி கோயில் வழிபாட்டு முறைகளை நடத்துவதுவதற்கு வாரியத்துக்கு சட்டபூர்வ அனுமதி வழங்குகிறது.
பல கோடி பக்தர்களின் நம்பிக்கை மற்றும் வழக்கத்தை இதுபோன்ற வழக்குகள் மூலம் மாற்ற முயலுவது முற்றிலும் தவறானது. எனவே, இந்த பொதுநலன் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.
சித்தாந்தங்களின் அடிப்படையில் யாரை அனுமதிப்பது என்பதை தீர்மானிப்பது என்பது மத வழிப்பாட்டு தலங்களுக்கான உரிமையாகும். இது அரசியல் சாசனம் 14-வது பிரிவு வழங்கியுள்ள சம உரிமைக்கு எதிராக உள்ளது என வழக்குத் தொடருவது என்பது ஒரு நோயாகவே உள்ளது.
சபரிமலையில் இருக்கும் கடவுள் ஐயப்பன் பூரண பிரமச்சாரியாக இருப்பதால், அங்கு இளம் பெண்கள் வழிபாடு செய்வதற்கு தடை விதிக்கப்படுகிறது. அவர்களை அனுமதித்தால் கடவுளின் பிரமச்சாரியம் பாதிக்கப்படும் என கேரள மாநில தலைமை செயலர் ஜிஜி தாம்சன் தாக்கல் செய்துள்ள பிரமான பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து வழக்கை நீதிபதிகள் வருகிற 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இதுதான் புரமோஷனா? புலம்பும் தனுஷ் ரசிகர்கள்!
ஹூக்ளி நதியில் பிரதமர் மோடி படகுப் பயணம்

ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!

5 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 5 மரண தண்டனை, 4 ஆயுள் தண்டனை!
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


