ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை காங். சுமத்துகிறது: பாஜக
மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்த போது நிலம் வழங்கியதில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை.


மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்த போது நிலம் வழங்கியதில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை. காங்கிரஸ் கட்சியின் முதல் குடும்பம் மோடி மீது தவறான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறது என பாரதீய ஜனதா கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
அக்கட்சியின் தேசிய செயலர் ஸ்ரீகாந்த் சர்மா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
குஜராத்தில் மோடி முதல்வராக இருந்த போது நிலங்கள் எல்லாம் மூன்றடுக்கு பரிசீலனைக்குப் பின்னரே வழங்கப்பட்டன. மேலும், நிலங்கள் எல்லாம் வெளிப்படையாகவும் சட்டப்படியேயும் வழங்கப்பட்டுள்ளன.
'குற்றப் பரம்பரையான' காங்கிரஸ், கட்சி மோடி ஆட்சியை குறை கூற இயலாத நிலையில் இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது.
நாட்டின் வளர்ச்சிக்கு மோடி ஆற்றி வரும் பங்களிப்பை ஜீரணிக்க முடியாமல், வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத் தொடரை முடக்குவதற்காக இத்தகைய குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கூறி வருகிறது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி, காங்கிரஸ் முதல்வர்கள் உம்மன் சாண்டி, வீரபத்ர சிங் ஆகியோர் மீது வழக்குகள் உள்ளது.
எத்தனை விதமான தடைகள் மற்றும் எதிர்மறை கருத்துகள் மோடி மீது கூறப்பட்டாலும், நாட்டில் உள்ள 58 சதவீதம் பேர் மத்தியில் மோடி பிரபலமாகவே உள்ளார் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...