தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

வடகிழக்கு மாநிலங்களுக்காக புதிய வளர்ச்சி திட்டம்: பிரதமர் மோடி

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்காக புதிய வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் என பிரமதர் நரேந்திர மோடி கூறினார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:27 pm

PTI

அருகேயுள்ள நாடுகளைப் போன்று வளர்ச்சி அடையும் வகையில் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்காக புதிய வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

அஸ்ஸாம் மாநிலத்தில் இன்று நடைபெற்ற விழாவில், பிரம்மபுத்ரா கிராக்கர் பாலிமர் லிமிடெட் மற்றும் நுமலிகார்க் ரீபைனரி லிமிடெட் என்ற இரு நிறுவனங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து பிரமதர் நரேந்திர மோடி பேசியதாவது:

நாடு முழுவதுக்கும் சீரான வளர்ச்சி இருக்க வேண்டும். மேற்கு பகுதி வளர்ந்து வரும் நிலையில், கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகள் பின்தங்கி இருக்கக்கூடாது. தற்போதைய நிலையில் நாட்டின் வளர்ச்சி முழுமையாக இல்லை.

தற்போது தொடங்கப்பட்டுள்ள நிறுவனங்கள் மூலம் அஸ்ஸாம் மக்கள் மட்டுமல்ல நாடே மகிழ்ச்சி கொள்கிறது.

கடந்த காலங்களில் பிரதமராக இருந்தவர் 25 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த திட்டங்களைத் தொடங்கியிருந்தால் வேலைவாய்ப்பு பெருகி இருப்பதோடு மாநிலமும் வளர்ச்சி பெற்றிருக்கும். இத்திட்டங்கள் 25 ஆண்டுகளுக்கு முன்பே நிறைவுப்பெற்றிருந்தால் இரண்டு தலைமுறைகள் பயனடைந்திருக்கும்.  தற்போதைய நிலையில் ஒரு தலைமுறையே இத்திட்டங்களுக்கான பலன்களை இழந்துவிட்டது.

(முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை மறைமுகமாக குறிப்பிட்டார் மோடி. சிங் அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்)

அண்டையில் உள்ள மியான்மர், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா மற்றும் இந்தோனேசிய நாடுகளைப் போன்று வளர்ச்சி அடையும் வகையில் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்காக புதிய வளர்ச்சி திட்டத்தை அரசு தயாரித்து வருகிறது.

இப்பகுதியில் போதிய போக்குவரத்து இல்லாதது வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் வகையில் ரயில்வே திட்டங்கள் விரைவுப்படுத்தப்படும்.

நிறுத்தப்பட்ட அனைத்து திட்டங்களும் அவை எந்த ஆட்சியில் தொடங்கப்பட்டிருந்தாலும் குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்கப்படும். இந்தியா வளர்ச்சி பெற வேண்டுமானால், திட்டங்கள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்கப்பட வேண்டும்.

இந்தியாவில் தொடங்குவோம், பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டங்களின் கீழ் இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்கு முன்வர வேண்டும். இப்பகுதியில் பிளாஸ்டிக் தொழிற்சாலை தொடங்குவதற்கான சாத்தியகூறுகள் உள்ளன.

இப்பகுதியில் உள்ள இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதோடு அவர்களின் சம்பாதிக்கும் திறனை உயர்த்துவதிலும் உறுதியாக உள்ளது.

மத்திய அரசு கூட்டாட்சி கொள்கையில் உறுதியாக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து அனைத்து வகையான முன்னேற்றம் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என்றார் மோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.