துலீப் மற்றும் பிரிமுலா மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் குடியரசுத் தலைவர் மாளிகையில் அமைந்துள்ள முகல் கார்டன் வரும் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 12ம் தேதி) பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்பட உள்ளது.
உலகப் புகழ்பெற்ற முகல் கார்டன், பொதுமக்கள் பார்வைக்கு பிப்ரவரி 12ம் தேதி முதல் மார்ச் 19ம் தேதி வரை (பராமரிப்புக்காக திங்கட்கிழமைகள் தவிர) காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்து வைக்கப்படும் என்று குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குடியரசுத் தலைவர் மாளிகையில் அமைந்துள்ள ஆன்மிகத் தோட்டம், மூலிகைத் தோட்டம், போன்சாய் தோட்டம், இசைத் தோட்டம் ஆகியவையும் வியாழக்கிழமை முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறந்துவைக்கப்படுகிறது.
குடியரசுத் தலைவர் மாளிகையின் 35வது வாயில் வழியாக பொதுமக்கள் தோட்டத்துக்குள் செல்லவும், வெளியேறவும் அனுமதிக்கப்படுவார்கள்.
இங்கு வரும் பொது மக்கள் குடிநீர் கேன்கள், சூட்கேஸ், கைப்பை, மகளிர் பர்ஸ், கேமரா, ரேடியோ, டிரான்சிஸ்டர், பெட்டிகள், குடைகள், உணவு பொருட்கள் என எதையும் கொண்டு வரக் கூடாது என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பொதுமக்கள் கொண்டு வரும் எந்த பொருளும் நுழைவு வாயிலேயே தடுத்து வைக்கப்படும் என்றும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மார்ச் 20ம் தேதி விவசாயிகள், மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்புப் படையினர், தொழிற்படையினர், தில்லி காவல்துறையினர் ஆகியோருக்கான சிறப்பு நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முகல் தோட்டத்தில் 12 ஆயிரம் துலீப் மலர்கள், சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் நிறங்களிலும், சிவப்பு, இளஞ்சிவப்பு, வெள்ளை உள்ளிட்ட நிறங்களில் கலந்தும் மலர்ந்து, பொதுமக்கள் கவரும் வகையில் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress

மே. வங்கத்தில் திரிணமூல், கேரளத்தில் காங்கிரஸ், தமிழகத்தில் திமுக வெற்றி: ஃபரூக் அப்துல்லா

ஈரான் தலைநகரில் நாளை முதல் மீண்டும் சர்வதேச விமானங்கள் இயக்கம்!

பலம் வாய்ந்த ஆர்சிபியுடன் மோதும் குஜராத்: சாய் கிஷோருக்கு வாய்ப்பு கிடைக்குமா?
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

