ஒன்பதாவது இந்தியா இலங்கை கூட்டுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நாளை இலங்கை செல்கிறார்.
இலங்கை தலைநகர் கொழும்புவில் நாளை நடைபெறும் 9-வது இலங்கை- இந்தியா கூட்டுக் கூட்டத்துக்கு சுஷ்மாவும், இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்களா சமரவீராவும் தலைமை வகிக்கின்றனர்.
இக்கூட்டத்தில் பொருளாதாரம், வர்த்தகம், மின்சக்தி மற்றும் ஆற்றல், தொழில்நுட்பம், கடல்சார் ஒத்துழைப்பு, சமூக, கலாச்சார மற்றும் கல்வி விஷயங்கள், அறிவியல் தொழில்நுட்பம், பாதுகாப்பு ஒத்துழைப்பு, சுகாதாரம், விமானப் போக்குவரத்து, சுற்றுலா மற்றும் மக்களிடையேயான ஒருங்கிணைப்பு ஆகிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
இரு நாட்டுக்கும் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் வகையில் கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் கூட்டுக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடைசியாக 2013 ஆம் ஆண்டில் புது தில்லியில் இக்கூட்டம் நடைபெற்றது.
இலங்கை பயணத்தின் போது மத்திய அமைச்சர் சுஷ்மா, அதிபர் சிறீசேனா, பிரதமர் விக்ரமசிங்க மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து பேசுவார் எனத் தெரிகிறது.
இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து அமைச்சர் இலங்கை ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் விவாதிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்கம், கேரளம், தமிழகத்தில் இவர்கள் வெற்றி பெறுவர்: பரூக் அப்துல்லா

இது தெரியுமா? பிளாஸ்டிக் நாற்காலியில் உட்காரும் பகுதியில் ஓட்டை இருப்பது ஏன்?

இனியாவது ஜன நாயகன் வெளியாகுமா?
இந்த வார ஓடிடி படங்கள்!
வீடியோக்கள்

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை


