மலப்புரம்: கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கல்வி நிறுவனம் ஒன்றில் நேற்று இரவு வழங்கப்பட்ட கெட்டுப்போன உணவை சாப்பிட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட 100 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் பெரிந்தல்மன்னா என்ற இடத்தில் புகழ்பெற்ற அலீகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் கிளை கல்வி நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு நேற்றிரவு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவை சாப்பிட்டவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட 100 பேர் பெரிந்தல்மன்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 26 பேர் இன்று காலை வீடு திரும்பினர். மற்றவர்கள் இன்னும் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.
ஆயினும் அவர்கள் நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கல்வி நிலைய நிர்வாகம் இது குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடி
தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!

ரூ. 299 மதிப்புள்ள ஆடையை வாங்க முயன்று ரூ. 1 லட்சத்தை இழந்த செவிலியர்!
நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு! எங்கே பதிவிறக்கம் செய்யலாம்?
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


