சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

ராணுவ குவிப்பு இல்லை; வழக்கமான பயிற்சி தான்: மம்தா புகாருக்கு ராணுவம் பதில்

மேற்கு வங்கத்தில் ராணுவம் குவிக்கப்பட்டிருப்பதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறும் புகாரில் உண்மையில்லை என்றும், ராணுவ பயிற்சி மட்டுமே மேற்கொள்ளப்படுவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :2 டிசம்பர் 2016, 7:33 am


கோல்கத்தா: மேற்கு வங்கத்தில் ராணுவம் குவிக்கப்பட்டிருப்பதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறும் புகாரில் உண்மையில்லை என்றும், ராணுவ பயிற்சி மட்டுமே மேற்கொள்ளப்படுவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநில தலைமைச் செயலகம் அருகே ராணுவம் குவிக்கப்பட்டிருப்பதாகவும், சுங்கச்சாவடிகளில் ராணுவத்தினர் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியிருப்பதாவது, மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ராணுவம் குவிக்கப்படவில்லை.  ராணுவத்தினர் தங்களது வழக்கமான பயிற்சியை மேற்கொண்டுள்ளனர். அவ்வளவே என்று பதில் அளித்துள்ளார்.

மேலும், சுங்கச் சாவடிகளில் பாதுகாப்புக்காக மட்டுமே ராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர். இது தேவையில்லாமல் பிரச்னையாக்கப்படுவதாக பாரிக்கர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.