அஸ்ஸாம் 2-ம் கட்ட தேர்தல்: 3 மணி நேரத்தில் 25% வாக்குப்பதிவு
அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட தேர்தலில் காலை 10 மணி வரையில் 25 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. 65 தொகுதிகளுக்கு கடந்த 4ஆம் தேதி முதல் கட்டத் தேர்தல் நடைபெற்ற நிலையில், எஞ்சியுள்ள 61 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.








