பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

கொல்கத்தா: வேட்புமனுத் தாக்கல் செய்தார் மம்தா

மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் தேர்தலில், பவானிப்பூர் தொகுதியில்  போட்டியிடும் முதல்வர் மம்தா பானர்ஜி இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

News image
Updated On :8 ஏப்ரல் 2016, 12:35 pm

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் தேர்தலில், பவானிப்பூர் தொகுதியில்  போட்டியிடும் முதல்வர் மம்தா பானர்ஜி இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல் ஆறு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டத் தேர்தலின் சிலப் பகுதிகளுக்கான தேர்தல்  ஏப்ரல் 4 ஆம் தேதி நடைபெற்றது. பிறப்பகுதிகளுக்கு ஏப்ரல் 11  ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இத்தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜி தெற்கு கொல்கத்தாவில் உள்ள பவானிப்பூர் தொகுதியிலில் போட்டியிடுகிறார். இதற்காக அவர் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார்.

ஏராளமான கட்சி தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்ற அவர், பவானிப்பூர் தொகுதி தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தீபா தாஸ் முன்ஷியும், பா.ஜ.க.வின் சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பேத்தியான சந்திரா போஸூம் போட்டியிடுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.