ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

புதிய திட்டத்தால் இணையத்தளத்தை மூட பிளிப்கார்ட் முடிவு?

மொபைல் வாடிக்கையார்களைக் கவர்வதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

News image
Updated On :7 ஜூலை 2015, 12:27 pm

முன்னணி ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் தனது இணையத்தளத்தை மூடிவிட முடிவு செய்துள்ளது. ஆப் வழியாக மொபைல் வர்த்தகத் தளமாக மாறவும் முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மைந்த்ரா இணையத்தளத்தை அடுத்து பிளிப்கார்ட் நிறுவனமும் அதே பாணியில் ஆப் மூலமாக வர்த்தகம் செய்ய முடிவு செய்துள்ளது. இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், மொபைல் வாடிக்கையார்களைக் கவர்வதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

ஏற்கெனவே பிளிப்கார்ட்டுக்கு வருகை தருகிறவர்களில் 75% பேர் மொபைல் ஆப் வழியாக வருவதால், மொபைல் வர்த்தகம்தான் வருங்காலத்துக்கானது என்று புதிய பாதையில் பயணிக்க உள்ளது பிளிப்கார்ட். இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.