தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சவூதி அரேபியாவில் துன்புறுத்தப்பட்ட இளைஞர்கள் தாயகம் திரும்பினார்

சவூதியில் முதலாளியால் அடித்து துன்புறுத்தப்பட்ட கேரளாவைச் சேர்ந்த இளைஞர்கள் அந்நாட்டில் இருந்து இன்று காலை திருவனந்தபுரம் வந்து சேர்ந்தனர்.

Updated On :26 டிசம்பர் 2015, 7:03 am

சவூதியில் முதலாளியால் அடித்து துன்புறுத்தப்பட்ட கேரளாவைச் சேர்ந்த இளைஞர்கள் அந்நாட்டில் இருந்து இன்று காலை திருவனந்தபுரம் வந்து சேர்ந்தனர்.

சவூதியில் வேலைக்குச் சென்ற இந்திய இளைஞர்கள், அவரது முதலாளியால் துன்புறுத்தப்பட்ட சம்பவம் வாட்ஸ் அப் வீடியோ மூலம் பரவிய நிலையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் நடவடிக்கையால் அவர் பத்திரமாக தாயகம் திரும்பியுள்ளனர்.

கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த 3 இளைஞர்கள் சவூதியில் வேலை இருப்பதாகக் கூறி ஏஜென்ஸி மூலம் வேலைக்குச் சென்றுள்ளனர்.

அங்கு முதலாளியால் அவர்கள் துன்புறுத்தப்பட்டுள்ளனர். ஒரு இளைஞரை கட்டையால் கண்மூடித்தனமாக சவூதி நபர் ஒருவர் தாக்கும் காட்சி வாட்ஸ் அப் வீடியோவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது பற்றிய செய்தி வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், பைஜு, அபிலாஷ், விமல் குமார் ஆகிய இளைஞர்கள் இன்று தாயகம் திரும்பியுள்ளனர். அவர்களை நேரில் பார்த்த உறவினர்கள், மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.