திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

மும்முரமாக நடைபெறும் பத்ரிநாத் சாலை சீரமைப்புப் பணி

உத்தரகண்ட் மாநிலத்தில் வெள்ளத்தால் கடுமையான பாதிப்புக்குள்ளான சமோலி மாவட்டத்தில் பத்ரிநாத் செல்லும் தேசிய நெடுஞ்சாலையைச் சீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

News image
Updated On :7 ஜூலை 2013, 9:34 pm

உத்தரகண்ட் மாநிலத்தில் வெள்ளத்தால் கடுமையான பாதிப்புக்குள்ளான சமோலி மாவட்டத்தில் பத்ரிநாத் செல்லும் தேசிய நெடுஞ்சாலையைச் சீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தேசிய நெடுஞ்சாலையில் 15 கிலோ மீட்டர் தூரத்துக்கும், குவால்தம் தேசிய நெடுஞ்சாலையில் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கும் முற்றிலும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இச்சாலையை சீரமைக்கும் பணியை "எல்லையோர சாலை மேம்பாட்டு நிறுவனம்' மேற்கொண்டு வருகிறது. மோட்டார் வாகனப் போக்குவரத்தை தாற்காலிகமாக அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை இந்நிறுவனம் எடுத்துள்ளது.

அத்தியாவசியப் பொருள்கள்: மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 63 கிராமங்களில் அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை போன்றவை கிராம வழங்கல் குழு மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன.

அந்தந்த கிராமத் தலையாரிகளும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது குறித்து, சமோலி மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ. முருகேசன் கூறியது:

சமோலி மாவட்டத்தின் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகள் ராணுவத்தின் கண்காணிப்பு வலயத்தில் வருகின்றன.

அதனால் அச்சாலைகளின் சீரமைப்பை எல்லையோர சாலை மேம்பாட்டு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

பணிகளை மாவட்ட நிர்வாகம் பார்வையிட்டு துரிதப்படுத்தி வருகிறது.

மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

உத்தரகண்டில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் ருத்ரப் பிரயாகை, சமோலி, உத்தரகாசி, பிதோரகர்ஹ் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இந்தப் பேரிடரில் சிக்கி உயிரிழந்த சுமார் 1,000 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இதில், 3,000 முதல் 4,000 பேர் வரை உயிரிழந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

பத்ரிநாத் செல்லும் தெஹ்ரி சாலையில் நடைபெறும் சீரமைப்புப் பணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.