குழந்தையுடன் இருக்கின்றவர் மனத்திடத்துடன் செயல்பட வேண்டும். ஏனென்றால், மற்றவர்கள் தம்மைப் பார்க்கிறார்கள் என்று தெரிந்ததும் வெட்கப் பட்டு, அங்குச் சிலர் வாங்கி தரச் சொல்ல, அது மேலும் வெட்கமாகும். இதிலிருந்து விடுபட, குழந்தையின் ஆட்டத்திற்கு இணங்கி-கேட்டதைச் செய்து விடுவதும் உண்டு. இதைக் கூடிய வரையில் தவிர்க்க வேண்டும். சில சூழ்நிலைகளில் முடியாமல் போய் இசைந்து விட நேரலாம், அப்படி நடந்தால் சற்று நேரத்திற்கு பிறகு, அல்லது வீட்டிற்குத் திரும்பிய பின்னர் “ நீ கேட்ட விதம் சரியான முறையில் இல்லை. உன்னையும் காயப்படுத்தி, என்னையும். அதனால் தான் அது போல் கேட்பது, பிடிக்க வில்லை. அப்படி செய்யாமல், கேட்டு கொள்ளலாம், ப்ளீஸ்" என்று சொல்லலாம், சிறு குழந்தைக்குக் கூட.