தேவையற்ற விஷயங்களிலிருந்து விலகி, உங்கள் வாழ்க்கைக்கு அத்தியாவசியமானவற்றில் கவனம் செலுத்துங்கள். கவலை உங்களை அரித்துக் கொன்றொழிக்கும் குணம். எனவே உங்களால் மாற்ற முடியாதவற்றைப் பற்றி சிந்திப்பதை விடுத்து உங்களால் செய்ய முடிந்தவற்றின் மீது அக்கறை காட்டுங்கள். நிதானம், பொறுமை, பக்குவம் ஆகியவற்றை அனுபவங்கள் மூலம் அறிந்து கொள்ளுங்கள். வாழ்நாள் முழுக்க கோபக்காரனாகவே இருப்பேன் என்பது உங்கள் முடிவாக இருந்தால் சந்தோஷம் எப்படி நிலைக்கும்? சின்ன சின்ன விஷயங்களில் கூட பரவசங்கள் கொட்டிக் கிடக்கும். கண் விழித்துப் பார்ப்பதில் தான் உள்ளது. எந்த நிலையிலும் விழிப்புணர்வுடன் செயல்பட்டால், அது உங்களின் வாழ்க்கையை செம்மைபடுத்தும்.