பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

உயர் ரத்தம் அழுத்தம் குறைய உதவும் சாலட்

முதலில் வெள்ளரிக்காயை நன்றாக கழுவி சிறிதாக அரிந்து அதனுடன் தக்காளி, மல்லித்தழை ஆகியவற்றையும் சேர்த்து பொடியாக அரிந்து கொள்ளவும்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:23 am

கோவை பாலா

வெள்ளரிக்காய் சாலட்

தேவையான பொருட்கள்

வெள்ளரிப் பிஞ்சு - 5
மோர் - 200 மி.லி
மிளகுத் தூள் - 10 கிராம்
தக்காளி - 2 
கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி
உப்பு - தேவையான அளவு

செய்முறை : முதலில் வெள்ளரிக்காயை நன்றாக கழுவி சிறிதாக அரிந்து அதனுடன் தக்காளி, மல்லித்தழை ஆகியவற்றையும் சேர்த்து பொடியாக அரிந்து கொள்ளவும். அரிந்து வைத்துள்ள கலவையுடன் மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து சாப்பிடவும்.

பயன்கள் : இந்த வெள்ளரிக்காய் கலவையை தொடர்ந்து சாப்பிட்டால் நீர் கடுப்பு, நீர் எரிச்சல், உடல் உஷ்ணம் தீரும். மேலும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த வெள்ளரிக்காய் சாலட்டை ஒருவேளை உணவாக எடுத்து வந்தால் உயர் ரத்த அழுத்தம் சமன்படும்.

முளைக் கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம், மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கொதிக்க வைத்து மதியம் வேளை உணவில் நிறைய சாப்பிட்டு வந்தால் செரிமான செயலிழப்பு நீங்கும். உணவில் பொறியலாக காயை காயை நீராவியில் வேக வைத்து பொறியல் செய்து நிறைய சாப்பிட்டு வரவும்.

வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.