பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

இன்றைய மருத்துவ சிந்தனை (28.11.2016) கறிவேப்பிலை

கறிவேப்பிலையை அரைத்து சாறு எடுத்து, தேங்காய் எண்ணெய்யில் கலந்து தலைக்குத் தேய்த்து வந்தால் நரை முடி மறையும்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:48 pm

கோவை பாலா


கறிவேப்பிலையை அரைத்து சாறு எடுத்து, தேங்காய் எண்ணெய்யில் கலந்து தலைக்குத் தேய்த்து வந்தால் நரை முடி மறையும்.

கறிவேப்பிலையை அரைத்து முட்டையின் வெள்ளைக் கரு சேர்த்துக் குழைத்து தலைக்குத் தேய்த்து குளித்தால் முடி கருப்பாக வளரும்.

கறிவேப்பிலையை மிளகாய் சேர்க்காமல் துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

கறிவேப்பிலை, சுக்கு, வெந்தயம், மஞ்சள், ஆகியவற்றை நன்றாக வறுத்துப் பொடியாக்கி, தினமும் காலை, மாலை இரு வேளையும் உணவுக்குப் பிறகு ஐந்து கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி, வாத நோய்கள் குணமாகும்.

கறிவேப்பிலையுடன், சுட்ட புளி, வறுத்த உப்பு, வறுத்த மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால்  ஜீரணக் கோளாறுகள் குணமாகும்.

கறிவேப்பிலை, நிலாவரை, இரண்டையும் சம அளவு எடுத்து உலத்திப் பொடியாக்கி,தினமும் இரவு உணவுக்குப் பிறகு ஒரு ஸ்பூன் அளவுக்குச் சாப்பிட்டால் பெருவயிறு மலச்சிக்ல் பிரச்னை தீரும்.

கறிவேப்பிலை, கரிசலாங்கண்ணிக் கீரை இரண்டையும் சம அளவு எடுத்துப் பொடி செய்து, தினமும் காலை மாலை இரு வேளையும் ஐந்து கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் தலைமுடி கருப்பாகவும் அடர்த்தியாகவும் வளரும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.