சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

சிறுநீரக நோய்கள் யாரை அதிகம் பாதிக்கும்?

ஒவ்வொரு மனிதருக்கும் இரண்டு சிறுநீரகங்கள் உள்ளது. அவை ஒவ்வொன்றும்

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:07 pm

உமா பார்வதி

ஒவ்வொரு மனிதருக்கும் இரண்டு சிறுநீரகங்கள் உள்ளது. அவை ஒவ்வொன்றும் 150 கிராம் எடை உடையது. அவரை விதை வடிவத்தில் உள்ள சிறுநீரகமானது உடலின் பின்பகுதியில் அமைந்துள்ளது. ரத்தத்தை பெறுவதும் வெளி அனுப்புவதும் இதன் முக்கியப் பணிகளாகும்.

சீறுநீரகத்தின் செயல்பாடுகள்

  • உடலில் உற்பத்தி ஆகும் நச்சுப் பொருட்களை பிரித்தல்
  • நீர்நிலை சமப்படுத்துதல்
  • உப்பைச் சமப்படுத்துதல்
  • அமிலத்தன்மையை சமம்படுத்துதல்
  • ரத்தக் கொதிப்பை சீர் செய்தல்

தெரியுமா?

சிறுநீரகத்தில் சுரக்கும் ஒருவித ஹார்மோன் ரத்த உற்பத்திக்கு காரணமாகிறது. 
வைட்டமின் டியின் உதவியால் எலும்புகளை உறுதிப்படுத்துகிறது

சிறுநீரகக் கோளாறின் அறிகுறிகள்

  • முகத்தில் வீக்கம்
  • சிறுநீர்க் குறைவு
  • கால்களில் வீக்கம்
  • சிறுநீரில் ரத்தம்
  • சிறுநீர் கழிப்பதில் சிரமம்
  • பசியின்மை
  • வாந்தி
  • உடல் அழற்சி
  • தூக்கமின்மை
  • அரிப்பு
  • சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்

பரிசோதனைகள்

  • மேற்சொன்ன அறிகுறிகளில் ஏதேனும் சில உங்களுக்கு இருக்குமாயின் உடனடியாக மருத்துவரை அணுகி முதலில் ஆலோசனைகளைப் பெறுங்கள்.
  • ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகளை மருத்துவரின் பரிந்துரையின் படி மேற்கொள்ளவும்.
  • இதற்கான பரிசோதனைகள் சுலபமானது. குறைந்த செலவில் செய்து கொள்ள முடியும்.

யாரை அதிகம் பாதிக்கும்?

சர்க்கரை நோய் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
அதிக ரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கும் இது வரும் வாய்ப்பு அதிகமுள்ளது.

தற்காப்பு

  • சீரான உணவு முறை சிறுநீரகப் பராமரிக்கு அனுகூலமானதாகும்
  • புகை பிடிப்பதை நிறுத்தவும். மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.
  • சுய மருத்துவம் ஒருபோதும் செய்யாதீர்கள். குறிப்பாக வலி நிவாரணிகளை உட்கொள்வதைத் தவிர்த்துவிடுங்கள்.
  • உணவில் உப்பை குறைத்து சாப்பிடுங்கள்.
  • தினமும் நடப்பதோ அல்லது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
  • நிறைய தண்ணீர் குடியுங்கள்.

உங்கள் கவனத்துக்கு

  • ரத்த கொதிப்பு 120 / 180 இருக்க வேண்டும்
  • வெறும் வயிற்றில் ரத்தத்தில் சர்க்கரை 110 mg/dlக்கு குறைவாக இருக்க வேண்டும்
  • ரத்தத்தில் கிரியாடினின் அளவு 0.6 - 1.2 mg/dl இருக்க வேண்டும்.

மருத்துவர் என்ன செய்வார்?

  • உங்களுக்கு சிறுநீரக கோளாறு வர வாய்ப்பு உள்ளதா என்று கூறுவார்.
  • ஆரம்ப நிலையில் நோயை கண்டுபிடிப்பார்.
  • சிறுநீரகங்களைப் பாதுகாக்க மருந்துகளை அளிப்பார்.
  • நோயை தடுக்கவும் பல நாட்களுக்கு தவிர்க்கவும் ஆலோசனை அளிப்பார்கள்.

சிறுநீரகம் பற்றி மேலும் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளவும், இலவசமாக கவுன்சிலிங் மற்றும் ஆரம்ப கட்ட பரிசோதனைகளை செய்து கொள்ளவும் அம்பத்தூரில் இயங்கிவரும் டாங்கர் விழிப்புணர்வு அமைப்பை அணுகலாம். தொலைபேசி 044 - 2625 0727 / 4231 5115

நன்றி - திருமதி ராஜலட்சுமி ரவி, டாங்கர் அமைப்பின் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்புச் செயல்பாடுகளின் தலைவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.