பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

தோல் சார்ந்த நோய்களைக் குணப்படுத்த உதவும் கசாயம்

இரத்தத்தை சுத்தப்படுத்தவும், தோல் சார்ந்த நோய்களை குணப்படுத்தவும் வெந்தயக்

News image
Updated On :27 ஜனவரி 2024, 3:46 pm

கோவை பாலா

இரத்தத்தை சுத்தப்படுத்தவும், தோல் சார்ந்த நோய்களை குணப்படுத்தவும் வெந்தயக் கீரை வாழைப்பூ கசாயத்தை குடித்து பாருங்கள். கைமேல் பலன் கிடைக்கும். 

தேவையான பொருட்கள்

வெந்தயக் கீரை         -   ஒரு கையளவு

வாழைப் பூ                  -   ஒரு கைப்பிடி

மிளகு                           -  10

செய்முறை

வெந்தயக் கீரையை சுத்தப்படுத்தி ஆய்ந்து எடுத்துக் கொள்ளவும். வாழைப்பூவை நரம்புகளை நீக்கி சுத்தப்படுத்தி நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 500 மி.லி தண்ணீர் ஊற்றி அதில் ஆய்ந்து வைத்துள்ள வெந்தயக் கீரை, நறுக்கிய வாழைப் பூ மற்றும்  மிளகுச் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.

நீரில் வெந்தயக் கீரை வாழைப் பூ நன்கு கொதித்தப் பின்பு  150 மி.லி அளவாக சுண்டவைத்து   இறக்கி வடிகட்டி வைத்துக்கொண்டு குடிக்கவும்.

பயன்கள்

இந்த வெந்தயக் கீரை வாழைப் பூ கசாயத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் இரத்தம் தூய்மையடையும். மேலும், தோல் சார்ந்த குறைபாடு உள்ளவர்களும் இதனை தினமும் குடித்து வந்தால் தோல் சார்ந்த நோய்களும் குணமாகும்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும்

வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

- கோவை பாலா

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.

Cell  :  96557 58609   ,  73737 10080

Covaibala15@gmail.com  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.