கால் ஆணியைக் குணப்படுத்த உதவும் அற்புத கசாயம்
கால் ஆணியால் அவதிப்படுகின்றீர்களா..கவலைய விடுங்க இந்த கசாயத்தைக் குடித்துப் பாருங்கள் நலன் பலன் கிடைக்கும்.


கால் ஆணியால் அவதிப்படுகின்றீர்களா..கவலைய விடுங்க இந்த கசாயத்தைக் குடித்துப் பாருங்கள் நலன் பலன் கிடைக்கும்.
தேவையான பொருட்கள்
வேப்பிலை - ஒரு கைப்பிடி
துளசி இலை. - ஒரு கைப்பிடி
வில்வ இலை. - ஒரு கைப்பிடி
அத்தி இலை. - ஒரு கைப்பிடி
கடுகு. - சிறிதளவு
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
செய்முறை
வேப்பிலை, துளசி இலை, வில்வ இலை, அத்தி இலை இவை அனைத்தையும் சுத்தப்படுத்திக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 600 மி.லி அளவு தண்ணீர் ஊற்றி அதில் மேற்கூறிய இலைகளையும் அதில் சிறிதளவு கடுகு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
நன்றாக கொதிக்க வைத்து 150 மி.லி அளவாக சுண்ட வைத்து கசாயமாக்கி இறக்கி வடிகட்டி குடிக்கவும்
பயன்கள்
இந்தக் கசாயம் கால் ஆணியை குணப்படுத்த உதவும் அருமருந்தாகும். இந்த கசாயத்தை தயார் செய்து காலை மாலை என இருவேளையும் தலா 75 மி.லி அளவாக குடித்து வரவும். இந்தக் கசாயத்தை தொடர்ந்து ஒரு மாதமேனும் சாப்பிட்டு வர வேண்டும்.
இரவு படுக்கப் போகும் முன்
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
- கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் காய்கறி சிகிச்சையாளர்.
Cell: 96557 58609,75503 24609
Covaibala15@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...