27.10.1976: தி.மு.க.விலிருந்து எம்.பி. ராஜிநாமா
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

27.10.1976 - Dinamani
புது டில்லி, அக். 26 - பார்லிமெண்ட் மெம்பர் ஆர்.பி. உலக நம்பி, திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து ராஜிநாமா செய்திருக்கிறார்.
இது சம்பந்தமாக அவர் இன்று இங்கு வெளியிட்ட ஓர் அறிக்கையில், "ஏழைகளுடைய நிலையை உயர்த்துவதற்கு காங்கிரசுடன் மோதாமல் ஒத்துழைத்துபோகும் பாதையைப் பின்பற்றவே நான் விரும்புகிறேன். சமுதாயத்தில் உள்ள பிற்பட்டவர்களின் - குறிப்பாகத் தாழ்த்தப்பட்டவர்கள், மலைவாசிகள் ஆகியோரின் நலனுக்கு அரசியல் வழிவிட்டு உதவ வேண்டும். அரசாங்கத்திடமிருந்து எது வந்தாலும், தாழ்த்தப்பட்டவர்கள். ஆதிவாசிகள் நலனுக்கானவை மற்ற பிற்பட்ட வகுப்பினர் ஆகியோரின் வந்தாலும், திராவிட முன்னேற்ற கழகத் தலைமை தற்போது எதிர்க்கும் கொள்கையைக் கடைப்பிடிக்கிறது. அந்த வழியிலிருந்து தி.மு.க. தலைமையை மாற்ற எனக்கு எந்த விதமான வழியும் தோன்றவில்லை'' என்று கூறியிருக்கிறார்.
சர்க்காரியா கமிஷன் விசாரணை - கருணாநிதியும், இதரரும் அளித்த மனு மீது வி.பி. ராமன் வாதம்
புது டில்லி, அக். 26 - தங்கள் மீதான கடும் புகார்களை விசாரிக்கும் சர்க்காரியா கமிஷனின் விசாரணையில் தி.மு.க. பிரதிவாதிகள் பங்கு கொள்ள மறுத்ததானது "தந்திரமான பின்வாங்குதலாகும்" என்று மத்திய அரசாங்க அடிஷனல் சொலிசிடர் ஜெனரலான வி. பி. ராமன் இன்று கமிஷன் முன்பாக வாதிக்தகயில் கூறினார்.
பிரதிவாதிகளின் வெளிநடப்புக்கு கமிஷன் பின்பற்றிய விதிமுறைக்கு எதிராக எந்த உண்மையான மனக்குறையும் காரணமல்ல என்று அவர் கமிஷனிடம் சொன்னார். சொல்லப் போனால் முன்னரே விதிமுறை உருவாக்கப்பட்டு, ஒழுங்குமுறைகள் நிர்ணயிக்கப்பட்டு, கமிஷனின் ஆகஸ்ட் 2-ந் தேதி உத்தரவில் விளக்கப்பட்டுவிட்டன. பிரதிவாதிகளுக்கு விதிமுறை பற்றி ஆட்சேபம் இருக்குமானால் அவர்கள் அந்தக் கட்டத்திலேயே வாபஸ் பெற்றிருக்க வேண்டும் என்றார் வி.பி. ராமன்.
எனினும் புலனாய்வு ஏஜன்சிகள் சேகரித்த ஏராளமான தகவல்கள் கமிஷன் முன்பாக வந்து குவிந்து, அவை பெரும் குவியலாகி பிரதிவாதிகள் அதில் மீள முடியாதபடி மூழ்கிவிடலாம் என்ற நிலையை அவர்கள் எதிர்ப்பட்டதால், அந்த வெளிநடப்பு உண்மையில் தந்திரமான பின்வாங்குதலே என்றும் வி.பி.ராமன் சொன்னார்.
வி. பி. ராமன் மேலும் கூறுகையில், பொதுமக்கள் முன்பாக விஷயம் வெளிப்பட்டுவிடலாம் என்ற அச்சத்திலேயே அவர்கள் பயந்து போய் வெளிநடப்புச் செய்ததாகவும் கூறினார். அந்த வெளிநடப்பில் கண்ணியம் எதுவும் இருக்கவில்லை என்றும் அந்த வெளிநடப்பு தங்களைத் தியாகிகளாக்கிக் கொள்வதற்கான கோழைத்தனமான நடவடிக்கை என்றும் அவர் சொன்னார். ...
Summary
27.10.1976: DMK MP resigns
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


