இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

12.10.1976: நடிகை எலிஸபெத் டெய்லர் 7-வது தடவையாக திருமணம்

அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

half century ago

12.10.1976 - Dinamani

Updated On :

வியன்னா, அக். 10 - உலகப் பிரசித்தி பெற்ற சினிமா நடிகை எலிஸபெத் டெய்லருக்கு இப்போது வயது 44 ஆகிறது.

அவர் இதுவரை ஆறு தடவை மணந்து கொண்டிருக்கிறார். எலிஸபெத்துக்கு குழந்தைகள் உண்டு. பேரப் பிள்ளைகளும் இருக்கிறார்கள்.

எலிஸபெத் டெய்லர் மீண்டும் மணந்துகொள்ளப் போவதாக அவருடைய காரியதரிசி இன்று அறிவித்தார்.

எலிஸபெத்தை மணந்து கொள்ளவிருப்பவர் முன்னாள் யு. எஸ். கடற்படைக் காரியதரிசி ஜான் வார்னர். அவருக்கு வயது 49 ஆகிறது. வார்னர் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டார்.

அமெரிக்கா இரண்டாவது நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளுவதற்காக பிரிட்டிஷ் அரசி ஜூலை மாதத்தில் யு.எஸ். வந்திருந்தார். அரசி அளித்த ஒரு வரவேற்பில்தான் நடிகை எலிஸபெத்தும், வார்னரும் முதல் முதலாகச் சந்தித்துக் கொண்டார்கள்.

வார்னர் ஒரு வாரத்திற்கு முன்புதான் ராஜிநாமா செய்தார். அவர் அமெரிக்க 2-வது நூற்றாண்டு விழா கமிட்டியின் தலைவராக இருந்தார்.

நடிகை எலிஸபெத் டெய்லர் சென்ற ஜூலை மாதத்தில் தான் தன்னுடைய ஆறாவது கணவரா நடிகர் ரிச்சர்ட் பர்ட்டனை விவாகரத்து செய்து கொண்டார். இந்த விவாகரத்துக்குப் பிறகு பர்ட்டன் பிரிட்டிஷ் மோட்டார் பந்தய டிரைவர் ஜெமிஸ்ஹன்ட் என்பவரின் முன்னாள் மனைவியை மணந்து கொண்டார்.

மின்சார சட்டத்தை திருத்த ராஷ்டிரபதி அவசரச் சட்டம்

புதுடில்லி, அக். 11- மின்சார சப்ளை தொழிலை திருத்தியமைக்க அரசாங்கம் எடுத்துள்ள பல முடிவுகளை செயல்படுத்த 1948 வருடத்திய மின்சார (சப்ளை) சட்டத்தின் சில பிரிவுகளை திருத்த ராஷ்டிரபதி ஒரு அவசர சட்டத்தை பிரகடனம் செய்திருக்கிறார்.

மத்திய மின்சார ஆணைக்குழுவின் அமைப்பு, மற்றும் அலுவல்கள் சம்பந்தப்பட்டது முக்கியமான திருத்தங்களில் ஒன்று. அவசர சட்டப்படி மத்திய மின்சார ஆணைக்குழு ஆற்ற வேண்டிய பணி கணிசமாக அதிகரிக்கும்.

தேசிய விசைத் திட்டத்தை வகுப்பது, விசைத் திட்டங்களின் தொழில்நுட்ப பொருளாதார மதிப்பீடுகளை செய்வது, விசைத் திட்டங்களை மேற்பார்வையிடுவது, மாநில மின்சார வாரியங்களுக்கு தொழில் நுட்ப உதவி அளிப்பது முதலிய விஷயங்களுக்கு மத்திய மின்சார ஆணைக்குழு பொறுப்பு வகிக்கும்.

ஒரு கோடி ரூபாய்க்கு அதிகமான செலவுள்ள எந்த விசைத் திட்டத்தையும் மத்திய மின்சார ஆணைக் குழுவின் அங்கீகாரம் இல்லாமல் செயல்படுத்த முடியாது.

நாட்டில் மின்சார உற்பத்தி சப்ளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், மாநில மின்சார வாரியங்கள் ஆகியவற்றை அமைப்பதற்கான வரம்பை மூலச்சட்டம் வகை செய்தது. ...

Summary

12.10.1976: Actress Elizabeth Taylor marries for the 7th time.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.