40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

13.5.1976: திருமண சட்டங்கள் திருத்த மசோதா - ராஜ்யசபையில் நிறைவேறியது

திருமண சட்டங்கள் திருத்த மசோதா - ராஜ்யசபையில் நிறைவேறியது ...

News image

13.5.1976 - Dinamani

Updated On :13 மே 2026, 4:24 am IST

புதுடில்லி, மே. 11- திருமணச் சட்டங்கள் திருத்த மசோதா அரசு கொணர்ந்த சில சிறு திருத்தங்களுடன் இன்று ராஜ்ய சபையில் நிறைவேறியது. இது 1955ம் வருஷ ஹிந்து திருமணச் சட்டத்தையும், 1954-ம் வருஷ விசேஷ திருமணச் சட்டத்தையும் மேலும் திருத்த வகை செய்கிறது.

விவாகரத்து, கோர்ட்டுகளில் விவாகரத்து மனுக்களின் துரித பைசல் சம்பந்தமான ஷரத்துக்களைத் தாராளமாக்கும் வகையில் சட்டக் கமிஷன் கூறியுள்ள பல்வேறு யோசனைகள் இந்த மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளன.

பரஸ்பரம் சம்மதத்தின்பேரில் விவாகரத்துக்குக் காத்திருக்கும் காலம் ஒரு வருஷத்திலிருந்து ஆறு மாதமாகக் குறைக்கப்படும்.

இந்தச் சட்டம் எல்லா ஹிந்துக்களுக்கும், பௌத்தர், ஜைனர்கள், சீக்கியர்களுக்கும் பொருந்தும். ஹிந்து சட்ட சம்பிரதாயங்களுக்குக் கட்டுப்பட்டவர்களல்ல என்று ஸ்தாபித்தாலன்றி, முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பாரசீகர்கள், யூதர்கள் அல்லாத மற்றவர்களுக்கும் இந்தச் சட்டம் பொருந்தும். ...

உதகமண்டலத்தில் 50 ஆண்டுகளாக இல்லாத பெரு மழை

உதகை. மே, 12- உதகமண்டலம் நகரில், செவ்வாய் பிற்பகலில் திடீரென்று பலத்த மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து ஆலங்கட்டி மழையும் சாடியது. சுமார் 1 மணி நேரம் மழை நீடித்தது.

நகரின் பல தாழ்ந்த பகுதிகள், குதிரைப் பந்தய மைதானம், பல சாலைகள் முதலியவற்றில் நீர் நிறைந்தது. உதகைக்கு குடி நீர் வழங்கும் நீர்த்தேக்கத்தில் கணிசமாக நீர்மட்ட அளவு உயர்ந்தது.

கடந்த 50 ஆண்டுகளில் இவ்வளவு வேகத்தோடு இங்கு மழை பெய்ததில்லை என்று கூறப்படுகிறது. இந்த மழையினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கு போலீஸாரும் தீயணைப்புப் படையினரும் ஈடுபடுத்தப்பட்டனர்.

சுமார் 4 அங்குலம் மழை பெய்துள்ளது. 30 வீடுகள் சேதமடைந்தன. சில கால்நடைகள் வெள்ளத்தில் போனதாகத் தெரிகிறது.

நகரின் நடுவே ஓடும் காட்டாற்றில் வெள்ளப் பெருக்கெடுத்தது. வெள்ளம் வீடுகளில் புகுந்தது. பாத்திரங்களையும், சமையல் சாமான்களையும் வெள்ளம் அடித்துக் கொண்டு போயிற்று.

உதகமண்டலத்தில் குதிரைப் பந்தயத்துக்காக வந்திருந்த ரேஸ் குதிரைகள் இந்த மழையினால் மிரண்டு போய் அவற்றின் தற்காலிக கொட்டில்களிலிருந்தும் விலகி ஓடின. ...

Summary

Marriage Laws Amendment Bill — Passed in the Rajya Sabha.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.