சென்னை. மே. 3 - தமிழ் நாட்டில் 10 மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள 3600 கிராமங்களில் விவசாயிகள் திருப்பிச் செலுத்த வேண்டிய அரசாங்கக் கடன்கள் வசூல் ஓராண்டு காலம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக மாநில அரசு இரண்டு நாட்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்ற ஆண்டும் இதேபோல் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயிகளுக்கு இதேபோன்ற சலுகை காட்டப்பட்டது.
முதல் அட்டவணைப்படி 1980- இல் கடன் பாக்கியில் கடைசி தவணை செலுத்தப்பட வேண்டும். இப்போதைய உத்தரவுப்படி 1982-ல் செலுத்தப்பட வேண்டும்.
கவர்னர் உறுதி
சேலம், மே. 3- விவசாயிகளிடமிருந்து கடன் வசூல் ஒத்திவைக்கப்படும் என்றும், கடன் தொகைக்குப் பதிலாக விவசாயிகளிடமிருந்து பம்பு செட்டுகளை ஜப்தி செய்வது நிறுத்தப்படும் என்றும் தமிழ் நாடு கவர்னர் கே.கே. ஷா உறுதி அளித்தார்.
(மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம். திருச்சி, புதுக்கோட்டை, தென் ஆற்காடு, வட ஆற்காடு, கோவை, சேலம், தருமபுரி ஆகிய 10 மாவட்டங்களில் 3594 கிராமங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது என்று தமிழ்நாட்டுக்கான எம்.பி.க்கள் குழுவின் கூட்டத்தில் கவர்னரின் ஆலோசகர் பி.கே. தவே கூறியிருந்தார்.) ...
'தண்ணீரை தேசிய சொத்தாக அறிவிக்க அரசியல் சட்டத்தில் திருத்தம் தேவை’
புதுடில்லி, மே. 3- தண்ணீர் தேசிய சொத்தாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும், இதற்காக வேண்டி அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்யப்படவேண்டும் என்றும், லோக்சபையில் இன்று பலமாக வற்புறுத்தப்பட்டது. விவசாய, பாசன அமைச்சகத்துக்கான மான்யக் கோரிக்கை மீது இன்று 12 மணி நேர விவாதம் துவங்கியது. இவ் விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய உறுப்பினர்கள் மேற்கூறியவாறு வற்புறுத்தினர்.
விவாதத்தில் கலந்துகொண்டு விவசாயம் பற்றிய பேசிய தேசிய கமிஷனின் தலைவரான என்.ஆர். மிர்தா, தண்ணீரை தேசிய சொத்தாக அறிவிப்பதற்காக அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு நாட்டில் தற்போதுள்ள சூழ்நிலை பயன்படுத்திக் கொள்ளப்பட வேண்டும் என்று கூறினார். ...
Summary
May 4, 1976: Government Loan Recovery from Farmers Postponed — Tamil Nadu Government Order
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

8.6.1976: சுகாதியா த.நா. கவர்னராக நியமனம்

5.6.1976: இலவசக் கல்வி குறித்து த.நா. அரசு மறுபரிசீலனை

23.5.1976: தமிழக அரசு ஊழியர் வரதட்சிணை வாங்க, தருவதற்கு தடை

ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி




