பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

30.3.1976: வரதட்சிணை தடுப்பு சட்டத்தை திருத்தி கடுமையாக்க பரிசீலனை

வரதட்சிணை தடுப்பு சட்டத்தை திருத்தி கடுமையாக்க பரிசீலனை...

Half century ago

30.3.1976

Published On :30 மார்ச் 2026, 4:00 am IST

புதுடில்லி, மார்ச், 29 - வரதட்சிணை தடுப்புச் சட்டத்தைக் கடுமையாக்குவதற்கான பிரேரணைகள் குறித்து மத்திய அமைச்சகங்களிடையே நடக்கும் விவாதங்களில் பரிசீலிக்கப்படுகிறது என்று தெரிகிறது.

உள்துறை அமைச்சகம், சட்ட அமைச்சகம், மற்றும் இதர அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள் இந்த விவாதங்களில் பங்கு கொள்கிறார்கள்.

வரதட்சிணை தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டு பத்து வருடங்கள் ஆகின்றன. இச்சட்டத்தின் கீழான குற்றங்கள் பிடியாணை யில்லாமல் பிடிக்கத்தகாத குற்றங்கள் ஆகும். அது மட்டுமின்றி, வரதட்சிணை தருகின்ற மணப்பெண்ணின் பெற்றோர் புகார் செய்ய விரும்புவதில்லை. எனவே வரதட்சிணை தடுப்புச் சட்டம் அநேகமாக ஏட்டளவிலேயே இருந்து வருகிறது.

வரதட்சிணையைப் பெற்றுக் கொள்ளுவதை பிடியாணை வேண்டாக் குற்றமாக ஆக்குவது, தற்போதைய விவாதங்களில் பரிசீலிக்கப்படும் பிரேரணைகளில் ஒன்று என்று தெரிகிறது.

கொடுக்கப்படுகின்ற அல்லது பெறப்படுகின்ற தொகை திருமணத்தை உத்தேசித்து கொடுக்ககப்படுகின்றது அல்லது தரப்படுகிறது என்று பிராசிகியூஷன் தரப்பினர் கோர்ட்டில் நீருபிக்க வேண்டும் என்பது தற்போதுள்ள நிலை. இதை மாற்றலாம் என்று கருதப்படுகிறது. கொடுக்கப்பட்டது அல்லது பெறப்பட்டது என்பதை மட்டும் பிராஸிகியூஷன் தரப்பினர் நிரூபித்தால் போதும் என்றும், திருமணத்திற்காகக் கொடுக்கப்படவில்லை அல்லது பெறப்படவில்லை என்பதை நிரூ பிக்கும் பொறுப்பு எதிரியினுடையதாக இருக்க வேண்டும் என்றும் கருதப்படுகிறது.

த. நா. வருமான வரி சோதனை பிரிவு பலப்படுத்தப்படுகிறது

சென்னை, மார்ச்: 29 - தமிழ் நாட்டில் வருமான வரிச் சோதனைகளை வலுப்படுத்த வரி ஏய்ப்பு சோதனைப் பிரிவின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க மத்திய வருமான வரி இலாகா முடிவு செய்துள்ளது. தற்போது இந்தப் பிரிவில் ஒரு துணை டைரக்டர் ஐந்து உதவி டைரக்டர்கள் இருக்கின்றனர். ஏப்ரல் முதல் தேதியிலிருந்து வருமான வரி சோதனைப் பிரிவு துணை டைரக்டர்களின் எண்ணிக்கையை இரண்டாக உயர்த்தி கூடுதலாக மூன்று உதவி டைரக்டர்கள் நியமிக்கப்படுவார்கள். வரி ஏய்ப்புச் செய்கிறவர்கள் விஷயத்தில் சோதனையைத் தீவிரப்படுத்த இந்தச் சோதனைப் பிரிவு வலுப்படுத்தப்படுகிறது.

சோதனைப் பிரிவு துணை டைரக்டராக தற்போது கே.வி.ராஜன் இருக்கிறார். இன்னொரு பிரிவு ஏற்படுத்தப்பட்டு அதன் துணை டைரக்டராக ஏ.வி. ராவ் நியமிக்கப்படுகிறார். விவசாயம், வணிகம், தொழில் நகரங்களான மதுரை, கோவை ஆகிய மாவட்டங்களில் வருமான வரி ஏய்ப்பைத் தடுக்க இன்னொரு சோதனைப் பிரிவு ஏற்படுத்த வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது என அறியப்படுகிறது. இந்த இரு மாவட்டங்களிலும் ஒவ்வொரு உதவி டைரக்டரை நியமித்தாலும் கூட வருமான வரி மூலம் மத்திய அரசுக்கு ஒரு கோடி ரூபாய் வீதம் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ...

Summary

Consideration to amend and strengthen the Dowry Prohibition Act.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.