புது டில்லி, மார்ச். 12- குஜராத்தில் ஜனதா முன்னணி அரசு ராஜிநாமா செய்ததையடுத்து இன்று ராஷ்டிரபதி ஆட்சி அமலாக்கப்பட்டது. அசெம்பிளி செயல்படுவது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
ராஷ்டிரபதி ஆட்சியை அமலாக்குமாறும், அசெம்பிளி செயல்படுவதை நிறுத்தி வைக்குமாறும் சிபாரிசு செய்து கவர்னர் கே. கே.விசுவநாதன் அனுப்பிய அறிக்கை கிடைத்தபின் ராஷ்டிரபதி பக்ருதீன் அலி அஹமது அரசியல் சட்டம் 356-வது ஷரத்தின் கீழ் பிரகடனத்தை வெளியிட்டார்.
ஆரம்பத்தில் மத்ய மந்திரி சபை கூடி கவர்னரின் சிபாரிசை அங்கீகரிக்க முடிவு செய்தது.
9 மாத காலமாக இருந்து வந்த ஜனதா முன்னணி அரசுக்கு ஆதரவாக அசெம்பிளியில் 87 வோட்டுகளும், எதிர்த்து 89 வோட்டுகளும் கிடைத்தன. 1976-77க்கு சிவில் சப்ளை இலாகாவுக்கான பட்ஜெட் மான்யக் கோரிக்கை மீது வோட்டெடுப்பை புது காங்கிரஸ் தலைமை கொறடா சாபில்தாஸ் மேத்தா வலியுறுத்தினார்.
அரசு தோல்வியடைந்த சில மணி நேரத்திற்குள் பாபுபாய் படேல் ராஜ்பவனுக்குச் சென்று, தமது மந்திரி சபையின் ராஜிநாமாவைச் சமர்ப்பித்தார். ராஜிநாமாவை கவர்னர் கே. கே. விசுவநாதன் ஏற்றுக் கொண்டு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை பதவியில் நீடிக்குமாறு பாபுபாய் படேலை கேட்டுக் கொண்டார். சட்டசபை புது காங்கிரஸ் கட்சித் தலைவர் மாதவ் சிங் சோலங்கி தனியாக கவர்னரைச் சந்தித்து சில நிமிட நேரம் பேசிக் கொண்டிருந்தார்.
மாநிலத்தில் நிலைமை தெளிவாக இல்லை என்றும், எந்தக் கட்சியும் நிலையான மந்திரிசபை அமைக்கும் நிலையில் இல்லை என்றும் கவர்னர் தமது அறிக்கையில் கூறியிருப்பதாகத் தெரிகிறது. கவர்னரின் அறிக்கையை மத்ய மந்திரி சபை இன்று மாலை கூடிப் பரிசீலித்து தனது சிபாரிசை ராஷ்டிரபதிக்கு அனுப்பியது.
சிவில் சப்ளை இலாகா மான்யக் கோரிக்கை மீது அசெம்பிளியில் நடந்த வோட்டெடுப்பில் மந்திரி சபை தோல்வியடைந்ததை கவர்னர் தமது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாகத் தெரிகிறது.
ராஷ்டிரபதி பிரகடனம், கவர்னரின் அறிக்கை ஆகியவற்றின் நகல்கள் திங்களன்று பார்லிமெண்டின் இரு சபைகளிலும் சமர்ப்பிக்கப்படும். ...
த. நா.வில் பஸ் கட்டணம் உயர்வு - 15 ௨ முதல் அமல்
சென்னை. மார்ச், 13 - தமிழ் நாட்டில் பஸ் கட்டணம் மார்ச் 15 ௨ திங்கள் முதல் உயருகிறது. சென்னையிலும் இதர டவுன் சர்வீஸ்களிலும் ஐந்து காசு உயரும். இதர வெளியூர் பஸ் போக்குவரத்தில் கட்டணம் கிலோ மீட்டருக்கு 1 காசு வீதம் உயரும்.
சென்னை நகரைப் பொறுத்தவரையில், குறைந்தபட்ச கட்டணம் இப்போது 15 காசாக உள்ளது. இனி 20 காசு கொடுக்க வேண்டும். ஒவ்வொரு கட்டத்திலும் ஸ்டேஜ் கட்டணம் 5 காசு வீதம் உயர்த்தப்பட்டுள்ளது. கோட்டையில் இன்று மாலை நிருபர்களிடம் மேற்கண்ட கட்டண உயர்வு முடிவை நிதித்துறைச் செயலாளர் குகனும், உள்துறை செயலாளர் கே. சுப்பிரமணிய மும் அறிவித்தனர்.
Summary
13.3.1976: Rashtrapati Rule in Gujarat
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

15.3.1976: கூடிய சீக்கிரம் சென்னைக்கு கிருஷ்ணா நீர் சப்ளை: ஆந்திர முதல்வர் உறுதி

14.3.1976: சர்க்காரியா கமிஷனுக்கு தேவைப்படும் தஸ்தாவேஜுகள் - பத்திரமாக பாதுகாக்க ஏற்பாடு

11.3.1976: த.நா. அரிசி கொள்முதல் உடனடி நிறுத்தம் - கவர்னர் அறிவிப்பு

8.3.1976: ராஷ்டிரபதி ஆட்சிக்குப் பின் த.நா.வில் விலைவாசிகள் இறங்கிவிட்டதாக கவர்னர் தகவல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



