சென்னை, மார்ச். 4 - தமிழக மேல் சபைக்கு நடைபெற இருக்கும் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், எவரும் போட்டியிட மாட்டார்கள். இப்படிப்பட்ட ஒரு முடிவை திராவிட முன்னேற்றக் கழக மேலிடம் எடுத்துள்ளதாக விஷயமறிந்த வட்டாரங்களிலிருந்து நம்பகமாக அறியப்படுகிறது.
தமிழக மேலவையில் ஆறாண்டுக் கால பதவி முடிந்து 21 உறுப்பினர்கள் ஏப்ரல் 20ம் தேதியுடன் பதவி விலகுகிறார்கள். இதில் 7 பேர் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களால் வோட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
தமிழக சட்டமன்றம் இப்போது கலைக்கப்பட்டு விட்டதால் அந்தத் தொகுதியிலிருந்து மேலவைக்கு ஏழு பேர்களைத் தேர்ந்தெடுக்க முடியாது. மூன்று பேர்களை கவர்னர் நியமிக்க வேண்டும்.
மீதமுள்ள 11 இடங்களுக்கு உள்ளாட்சித் தொகுதியிலிருந்தும் (ஏழு பேர்களையும்) பட்டதாரிகள் தொகுதியிலிருந்தும் (இரண்டு பேர்களையும்) ஆசிரியர்கள் தொகுதியிலிருந்தும் (இரண்டு பேர்களையும்) பதினோரு பேர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கான ஏப்ரல் தேர்தல் 10ம் தேதி நடைபெறும் என்று மத்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
மேலவைக்கு நடைபெறவிருக்கும் இந்தத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எவரும் போட்டியிட வேண்டாம் என்று தி.மு.க. மேலிடம் முடிவு செய்துள்ளது. கழகத் தலைவர் தனிப்பட்ட முறையில் சுயேச்சையாகப் போட்டியிடுவார்களேயானால் அது அவர்களுடைய சொந்த முடிவு. கழகத்தைப் பொறுத்தவரையில் இன்றைய சூழ்நிலையில் எவரையும் அதிகாரப்பூர்வமான வேட்பாளராக நிறுத்துவதில்லை என்று கழக மேலிடம் முடிவு செய்துள்ளதாக விஷயமறிந்த வட்டாரங்களிலிருந்து ஊர்ஜிதமாக அறியப்படுகிறது.
பொதுத் தேர்தலைப் புறக்கணிக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்று தலைவர்கள் முடிவு செய்துள்ளதாக அறியப்படுகிறது.
கடன் வசூல் மேலும் ஓராண்டு நீடிக்க அவசரச் சட்டம்
சென்னை, மார்ச். 4 - தமிழ்நாட்டில் கடன்பட்ட மற்றும் விவசாயிகளுக்கும், விவசாயிகளல்லாத சிலருக்கும் தற்காலிக கடன் நிவாரணம் வழங்கும் காலத்தை மேலும் ஓராண்டு காலம் நீடித்து தமிழ் நாடு கவர்னர் கே. கே ஷா, மூன்று அவசரச் சட்டங்களைப் பிறப்பித்துள்ளார்.
முதலாவது அவசரச் சட்டம் தமிழ்நாடு விவசாயிகள் கடன் (தற்காலிக நிவாரண) சட்டம் என அழைக்கப்படும். விவசாயிகளிடமிருந்து கடன் வசூலிப்பதை மேலும் ஓராண்டு ஒத்திவைக்க இந்த அவசரச் சட்டம் வகை செய்கிறது. இந்த அவசரச் சட்டம் 1976 ஜனவரி 15ந் தேதியிலிருந்தே அமலுக்கு வந்து விட்டதாகக் கருதப்படும். விவசாயிகளிடமிருந்து கடன் பாக்கி வசூலுக்காக எவரும் சிவில் கோர்ட் அல்லது ரெவினியூ கோர்ட்டில் வழக்குத் தொடருவதை இந்த அவசரச் சட்டம் தடுக்கிறது.
விவசாயி என்றால் யார் என்பது பற்றி அவசரச் சட்டத்தில் விளக்கம் கூறப்பட்டுள்ளது. விவசாய நிலத்தில் அக்கறையுடைய நபர், இத்தகைய அக்கறை காரணமாக இத்தகைய நிலத்தை வைத்திருப்பவர் அல்லது வாரம் பெற்றுக் கொண்டிருப்பவர்கள் "விவசாயி” என்று கருதப்படுவர். குத்தகைதாரரும் இந்த சொல்லில் அடக்கமாவார். 1971-71, 1972-73, 1973-74 1974-75ம் ஆண்டுகளில் எந்த ஆண்டிலாவது வருமான வரிச்சட்டத்தின் கீழ் வருமான வரி விதிப்புக்குட்பட்டவர் அல்லது தமிழ் நாடு விவசாய வருமான வரிச் சட்டத்தின் கீழ் விவசாய வருமான வரி விதிப்புக் குட்பட்டவர் அல்லது விற்பனை வரி அல்லது விற்பனை வரிக் குட்பட்டவர்கள், இந்தச் சொல்லின் விளக்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ...
Summary
5.3.1976: DMK decides not to contest the Upper House elections
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தத் தேர்தலில் தேமுதிகதான் 'கேம் சேஞ்சர்': பிரேமலதா விஜயகாந்த் சிறப்பு நேர்காணல்

தேர்தல் ஸ்பெஷல்! சட்டப்பேரவைத் தேர்தலில் யார் யார் போட்டியிட முடியாது?

பேரவைத் தேர்தலில் போட்டியில்லை என்று மக்கள் நீதி மய்யம் அறிவித்திருப்பது குறித்து...வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



