ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

20.7.1976: தமிழ் நாட்டில் எல்லா குழந்தைகளுக்கும் கட்டாய இலவச ஆரம்பக் கல்வி

அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

half century ago

20.7.1976 - Dinamani

Published On :20 ஜூலை 2026, 3:59 pm IST

சென்னை: 6 வயது முதல் 14 வயது வரையிலான எல்லாக் குழந்தைகளுக்கும் கட்டாய இலவச ஆரம்பக் கல்வி அளிக்க அவசர நடவடிக்கைகளை எடுக்குமாறு கல்வித் துறை ஆய்வு அதிகாரிகளுக்கு மாநில பள்ளிக்கல்வி டைரக்டர் கூறியிருக்கிறார் என்று தமிழ்நாடு அரசின் ஒரு உத்தரவு கூறுகிறது.

இம்மாதம் 17, 18 தேதிகளில் புதுடில்லியில் மத்திய கல்வி அமைச்சகம் கல்வி மத்திய ஆலோசனை போர்டின் கமிட்டிகளின் கூட்டத்தையும், கல்வித்துறை காரியதரிசிகள், கல்வித்துறை டைரக்டர்கள் மகா நாட்டையும் கூட்டியிருந்தது.

6 வயது முதல் 14 வயதுவரையில் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் ஆரம்பக் கல்வியை அளிக்கும் திட்டத்திற்கு மிக உயர்ந்த முன்னுரிமையை மாநில அரசுகள் அளிக்க வேண்டும் என்று அந்த மகாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.

பெண்கள், ஷெட்யூல்ட் ஜாதியினர், ஷெட்யூல்ட் குலத்தவரின் குழந்தைகள், நிலமற்ற தொழிலாளர்கள், நகர்ப்புற குடிசைப் பகுதிகளில் வாழ்பவர்கள் போன்ற இதர பலவீன பிரிவினரின் குழந்தைகள் ஆகியோருக்கு கல்வி அளிப்பதில் மிகுந்த முக்கியத்துவம் தர வேண்டும் என்று கருதப்படுகிறது. கட்டாய இலவச ஆரம்பக் கல்வித் திட்டம் இந்தப் பிரிவினர் விஷயத்தில் குறிப்பாக செயல்படுத்தப்பட வேண்டும் என்று கருதப்படுகிறது. ...

சென்னைக்கு கிருஷ்ணா நீர் பற்றி இன்று பேச்சு

சென்னை, ஜூலை. 19 - சென்னை நகருக்கு கிருஷ்ணா நதியிலிருந்து தண்ணீர் கொண்டு வருவது சம்பந்தமாக நாலு மாநில அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தை சென்னையில் இன்று (செவ்வாய்) காலை துவங்குகிறது.

மத்திய சர்க்கார் பாசனத்துறை கூடுதல் செயலாளர் சி.சி. படேல் முன்னிலையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறும். ஆந்திரா, கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மூன்று மாநிலங்களைச் சேர்ந்த பொதுப் பணித்துறை அதிகாரிகள், பாசனத்துறை பொறியாளர்கள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

சென்னை நகர குடிநீர் திட்டத்துக்காக கிருஷ்ணா நதியிலிருந்து 15 டி.எம்.சி. (15 ஆயிரம் கோடி கன அடி) தண்ணீர் தர ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரம் ஆகிய மூன்று மாநிலங்களும் ஒப்புக் கொண்டுள்ளன என்று கடந்த பிப்ரவரியில் சென்னை பொதுக் கூட்டத்தில் பிரதம மந்திரி கூறியிருந்தார். இதற்கான உடன்பாடும் சில மாதங்களுக்கு முன் கையெழுத்தானது. ...

Summary

Compulsory free primary education for all children in Tamil Nadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.