ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

9.8.1976: செவ்வாய் மண்ணில் உயிரின அறிகுறி - வைகிங் தகவல்

அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

half century ago

9.8.1976 - Dinamani

Published On :9 ஆகஸ்ட் 2026, 5:06 am IST

பாசடேனா (யு. எஸ்), ஆக.8 - செவ்வாய் கிரகத்தில் உயிரினம் இருந்திருக்கக் கூடும் என்று நம்பிக்கைத் தரக்கூடிய தகவல்களை "வைக்கிங்-1" விண்கலம் மீண்டும் பூமிக்கு அனுப்பி உள்ளது.

உயிரினம் பற்றிய அறிகுறிகளுடன் ‘வைக்கிங்-1’ இவ்வாறு தகவல் அனுப்புவது, கடந்த ஒரு வாரத்தில் இது இரண்டாம் முறையாகும்.

மிகவும் புராதன கால உயிரினங்கள், செவ்வாய் மண்ணில் புதைந்து கிடக்கக் கூடும் என்று நம்பிக்கை தரக்கூடிய தகவல்களை "வைக்கிங்-1" செயற்கைகோளின் "லாண்டர்" கலம் அனுப்பியுள்ளதாக, அமெரிக்காவில் செவ்வாய் கிரக ஆய்வில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

''ஆனால் இது உண்மை என்று இப்போதே உறுதியாக சொல்லி விட முடியாது; வைக்கிங்-1 லாண்டர் கலத்தின் கருவிகளின் ஏதேனும் கோளாறு ஏற்பட்டு, அது ஒருவேளை தவறாகத் தகவல் அனுப்பியிருக்கலாம்; அல்லது செவ்வாய் மண்ணில் ஏற்பட்ட சில வினோதமான ரசாயன மாறுதல்களின் விளைவாகவும் "உயிரின வாழ்வு" போன்ற அறிகுறிகள் தோன்றியிருக்கலாம். எதையும் நிச்சயமாக சொல்ல முடியாது"

"உயிரினம் பற்றிய பரிசோதனை ஒன்றை வைக்கிங் லாண்டரின் அதிநுட்பமான கருவிகள் ஆகஸ்டு - 23ந் தேதி நடத்தவிருக்கின்றன. அதன் பின்பே, இது பற்றி திட்டவட்டமான முடிவை அறிவிக்க முடியும்" இவ்வாறு செவ்வாய் கிரக ஆய்வு விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ...

... தண்ணீர் உண்டு?

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கக்கூடும் என்று சில விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

உயிரினம் வாழ்வதற்கு அத்யாவசிய தேவைகளில் ஒன்று தண்ணீர். செவ்வாய் கிரகத்தில் இந்தத் தண்ணீர் ஏதோ ஒரு வடிவத்தில் இருக்கிறது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

செவ்வாய் நிலப்பரப்பிற்குக் கீழே, "நிரந்தரமாக உறைந்து போன" (பெர்மா பிராஸ்ட்) வடிவத்தில் தண்ணீர் இருக்கக் கூடும் என்று அந்த விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

"செவ்வாய் கிரகத்தில் உயிரினம் எதையும் நாங்கள் கண்டுபிடித்து விடவில்லை என்று நான் வலியுறுத்த விரும்புகிறேன்" என்று, உயிரியல் நிபுணர் டாக்டர் நார்மன் ஹோரோவிட்ஜ் கூறினார். "உயிரினத்தை மூலமாகக் கொண்டது என்று நம்பத்தகுந்த சில தகவல்கள் எங்களுக்குக் கிடைத்துள்ளன. ஆனால் இந்த தகவல்களைக் கொண்டு உயிரினம் பற்றி உறுதி கூற முடியாது; செவ்வாய் மண்ணில் உள்ள நிலைமைகளுக்கான பல்வேறு காரணங்களில் உயிரினம் பற்றிய சாத்தியக் கூறும் ஒன்றாகும். அவ்வளவுதான்" என்று அவர் கூறினார். ...

புது கல்வி முறை பற்றி அரசு உத்தரவு - ஹையர் செகண்டரி படிப்பை பள்ளிகளுடன் இணைக்க முடிவு

திருச்சி, ஆக 8 - தமிழ் நாட்டில் 10 ஆண்டு பள்ளிப் படிப்பு, 2 ஆண்டு ஹையர் செகண்டரி படிப்பு, 3 ஆண்டு பட்டப் படிப்பு என்ற புதிய கல்வி முறையை அமல் செய்வதற்குத், தமிழ் நாடு அரசு 'வெகு விரைவில்' உத்தரவு பிறப்பிக்கும் என்று, மாநில கல்வித்துறை விசேஷ செயலாளர் சி. ஜி ரங்கபாஷ்யம் அறிவித்துள்ளார்.

2 ஆண்டு ஹையர் செகண்டரி படிப்பை, பள்ளிகளுடனேயே இணைத்துவிட வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.

எனினும், "இந்த ஹையர் செகண்டரி" படிப்பை அளிப்பதற்கு கல்லூரிகள் முன்வந்தால் இடைக்கால ஏற்பாடாக, அவற்றுக்கு இதற்கு அனுமதி தரப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

"ஹையர் செகண்டரி" கல்விக்காக, ஒரு மாநில போர்டு ஏற்கெனவே அமைக்கப்பட்டு விட்டதாகவும் அவர் கூறினார்.

புதிய கல்வி முறை பற்றிய விவாதம் யாவும் முடிவடைந்துவிட்டதாகவும், அரசு இந்தப் புது கல்வி முறை பற்றி வெகு விரைவில் உத்தரவு பிறப்பிக்கும் என்றும் அவர் கூறினார். ...

Summary

Signs of life in Martian soil – Viking data

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.