பெங்களூர், ஏப். 18- இந்திய விண்வெளிக் கோள் "ஆர்யபட்டா"வின் ஓராண்டு விண்வெளி வலம் நாளைய தினம் முடிவடைகிறது.
"ஆர்யபட்டா" சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதியன்று ரஷிய விண்வெளிக்கோள் ஏவுகளத்திலிருந்து ஏவப்பட்டது.
"ஆர்யபட்டா" அதன் அடிப்படை பணிகளில் பெரும்பாலானவற்றை முடித்துவிட்டது. விண்வெளிக்கோள் தொழில்நுணுக்கங்களில் நாட்டின் ஆற்றலும் நிலைநாட்டப்பட்டுள்ளது.
இங்கு பீனியாவிலுள்ள இந்திய விஞ்ஞான விண்வெளிக்கோள் திட்டத்தை இன்று நிருபர்கள் பார்வையிட்டனர்.
இந்தியாவின் வருங்கால விண்வெளிக்கோள் திட்டங்களுடன் சம்பந்தப்பட்ட அம்சங்கள் ஆராய்ச்சிகளும், ”ஆர்யபட்டா” மூலம் வெற்றிகரமாக நடந்ததென்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி ஸ்தாபனத் தலைவர் பேராசிரியர் தவான், இந்திய விஞ்ஞான விண்வெளிக்கோள் திட்ட டைரக்டர் பேராசிரியர் ஊ.ஆர். ராவ் கூறினர்.
'"ஆர்யபட்டா" 5465 வது வலம் வந்து கொண்டிருக்கையில் நிருபர்கள் பார்த்தனர். திட்டமிட்டபடி "ஆர்யபட்டா"வில் உள்ள எல்லா தொழில்நுட்பக் கருவிகளும், துணைக் கருவிகளும் இயங்கி வருகின்றன என்று கூறினர். "ஆர்யபட்டா" அழிவதற்கு முன் 8 ஆண்டுகாலம் விண்வெளியில் இருந்து வரும்.
விண்வெளிக்கோள் தொழில்நுட்ப அறிவை பின்னடைந்த நாடுகளுக்கு இந்தியா தரத் தயாரென்றும், இதுவரை எந்த பின்னடைந்த நாடும் கோரவில்லை என்றும் தவான் கூறினார்.
"ஆர்யபட்டா'வின் ஓராண்டு சாதனைகளைப் பற்றிய வண்ணப் படத் துண்டுப் பிரசுரம் இருக்கிறதென்றும் இது நாட்டிலுள்ள எல்லா கல்விச் சாலைகளிலும் வைக்கப்படும் என்றும் கூறினார். எல்லா தகவல்களும் எளிய நடையில் விளக்கப்பட்டுள்ளன.
விண்வெளிக்கோள் மூலம் 2400 கிராமங்களில் போதனா திட்டம் நிறைவேற்றப்படுமென்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
Summary
“Aryabhata” completes one year in orbit today.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மியான்மா்: ஆங் சான் சூகிக்கு தண்டனை குறைப்பு; முன்னாள் அதிபா் விடுவிப்பு

மேற்காசிய போரால் இந்திய ஏற்றுமதியில் தாக்கம்: ஏப். 15-க்கு பிறகே முழுமையாக தெரிய வரும் - மத்திய அரசு

ஏப். 9-இல் லிட்டில் அந்தமான் புரோ சா்ஃப்பிங்

விலையில்லா Fridge, 3 Gas Cylinders! ADMKவின் கவர்ச்சிகர தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு! | EPS
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



