பம்பாய், ஏப். 11 - பம்பாய் குர்லா ஸ்டேஷனுக்கு அருகில் இன்று காலை ஒரு ரயிலில் பெண்கள் பெட்டியிலிருந்து புகை வந்ததைக் கண்டு பலர் பீதியடைந்து வண்டியிலிருந்து குதித்தனர் . வயதான ஒரு பிரயாணி மரணமடைந்தார். மற்றும் 17 பேர் காயமடைந்தனர்.
இச்சம்பவம் இன்று காலை சுமார் 9.30 மணிக்கு குர்லா ஸ்டேஷனுக்கு சுமார் இரண்டு பர்லாங்கு தூரத்துக்கு அப்பால் நடந்தது. காட்கோபரிலிருந்து விக்டோரியா டெர்மினசுக்குச் சென்று கொண்டிருந்த ஒரு ரயிலில் முன்னால் இருந்த பெண்கள் சங்லி பெட்டியிலிருந்து புகை கிளம்புவதைக் கண்ட சில பிரயாணிகள் அபாய அறிவிப்புயைப் பிடித்து இழுத்தனர். டிரைவர் வண்டியை நிறுத்தினார். ஆனால் வண்டி நிற்பதற்குள் பின்னால் இருந்த பெட்டிகளிலிருந்து பிரயாணிகள் குதிக்க ஆரம்பித்தனர்.
சம்பவத்துக்குப் பின் உடனடியாக மின்சார ரயில் போக்குவரத்துக்கு மின்சார சப்ளை நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் ரயில் போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.
புகை கிளம்பிய பெட்டி அதிகாரிகளால் பார்வையிடப்பட்டது . புகை வந்த காரணம் பற்றி மேற்கொண்டு புலன் விசாரணை நடந்து வருகிறது.
இறந்தவரின் பெயர் தெரியவில்லை. அவரிடம் காட்கோபரிலிருந்து வி.டி. ஸ்டேஷனுக்கு டிக்கெட் இருந்தது.
காயமடைந்தவர்களில் ஒன்பது பேர் ஸையான் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆறு பேருக்கு அந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சையளித்து அனுப்பப்பட்டது. இருவருக்கு மிகசொற்ப காயமே. ஆதலால் ரயில்வே டாக்டர்களே சிகிச்சையளித்து அனுப்பினர்.
நிர்வாக திறனை பெருக்க தமிழக அரசு தாக்கீது
திருச்சி. ஏப். 11- தமிழ்நாட்டில் எல்லா அரசு அலுவலகங்களிலும், சுயாதிகாரம் படைத்த நிறுவனங்களிலும் நிர்வாகத் திறமையை அபிவிருத்தி செய்யக் கோரி விவரமான தாக்கீதுகள் அனுப்பப்பட்டுள்ளன.
முதலெடுப்பில் நிர்வாகத்தின் அடிப்படை உறுப்புகள் என்ற வகையில் பீர்க்கா, பஞ்சாயத்துக் களில் புலப்படும்படியான மாறுதல் ஏற்பட வேண்டும். பொது மக்களுடன் நேரடித் தொடர்புள்ள அரசு துறைகளும் மற்ற பொதுஜன உபயோகத் துறைகளும் மரியாதை, திறமை, பாரபட்சமின்மையுடன் நடந்துகொள்வதாய் மக்கள் உணருமாறு செயல்படச் செய்ய வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. ...
Summary
Smoke in Moving Train — One Dead, 17 Injured After Jumping in Panic
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாதவரம் நெகிழி ஆலையில் தீ!

இத்தாலியில் இரண்டு இந்தியர்கள் சுட்டுக்கொலை

வாக்குப் பதிவின்போது விவிபாட் இயந்திர பேட்டரியில் புகை!

வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



