சென்னையில் திருட்டு ஸ்கூட்டரில் பயணம் செய்த மகளால் திருட்டு தந்தை பிடிபட்ட சுவாரஸ்ய சம்பவம் புதன்கிழமை நடந்துள்ளது.
சென்னை புறநகர் பகுதியில் அமைந்துள்ள மணலி பாரதியார் தெருவைச் சேர்ந்த கார்த்திக் (33), சாத்தாண்கூடுவிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் சிவராத்திரியன்று கோயிலுக்கு சென்றுள்ளார். இரவு 11 மணிக்கு திரும்பி வந்த போது ஸ்கூட்டர் திருடப்பட்டது தெரியவந்தது.
இந்நிலையில், ஆட்டோவில் அவரது மனைவி மற்றும் குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு, மணலி காவல்நிலையத்தில் புகார் அளிக்க அதே ஆட்டோவில் வந்துள்ளார். அப்போது 14 வயது பெண் தன்னுடைய ஸ்கூட்டரை ஓட்டிச் சென்றதை கண்டு ஆட்டோவில் பின்தொடர்ந்தார்.
அப்போது அவரை பிடித்து விசாரிக்கையில், அந்த ஸ்கூட்டர் தனது தந்தையுடையது என்று அவர் வாதாடியுள்ளார். பின்னர் போலீஸார் நடத்திய விசாரணையில், தனது தந்தை ஒரு ஆட்டோ ஓட்டுநர் என்றும், அவரது ஸ்கூட்டரை விட்டுவிட்டு சென்றதாக கூறியுள்ளார். இதையடுத்து சரவணன் (35) என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவர் இருசக்கர வாகனங்களை திருடி விற்பனை செய்து வருவது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த திருட்டு வாகனங்களில் ஒன்றை அவரது மகள் எடுத்து ஓட்டிச் சென்றதால், திருட்டு தந்தை கைது செய்யப்பட்டு, அவரிடம் இருந்து 4 இருசக்கர வாகனங்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சரவணன், நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழுவின் பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்த டிரம்ப்

திருச்சி - தாம்பரம் இடையே நாளை (ஏப். 26) சிறப்பு ரயில்!

225 இடங்களைக் கைப்பற்றி பாஜகவை வேரறுப்போம்: திரிணமூல் காங்கிரஸ்

ஸ்ரீநகர் - லே தேசிய நெடுஞ்சாலையில் பனிச்சரிவு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


