ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

75 குற்றச்சாட்டுகளுடன் 'டிமிக்கி' கொடுத்த ஆட்டோ ஓட்டுநர் கைது

தொடர்ச்சியாக சாலை விதிமீறல் குற்றச்சாட்டுகளில் சிக்கி போக்கு காட்டிக்கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர் புதன்கிழமை பிடிபட்டார். 

News image
Updated On :7 மார்ச் 2019, 3:37 pm

தொடர்ச்சியாக சாலை விதிமீறல் குற்றச்சாட்டுகளில் சிக்கி போக்கு காட்டிக்கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர் புதன்கிழமை பிடிபட்டார். தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர், கடந்த 2017-ஆம் ஆண்டு மே மாதம் முதல் சாலை விதிகளை மீறியதற்காக 74 குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளார். அபராதத் தொகையாக ரூ.12,555 சேர்ந்துள்ளது. 

இந்நிலையில், 75-ஆவது சாலை விதிமீறல் (சிக்னலை மீறிச் சென்றது) குற்றத்தில் ஈடுபட்ட போது சைபராபாத் டிராஃபிக் கான்ஸ்டபிள் ராஜுவால் பிடிபட்டார். பின்னர் மாதாபூர் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனில் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டார். எஸ்ஐ மாதவ் ரெட்டி, அந்த ஆட்டோவை பறிமுதல் செய்தார். 

முன்னதாக, சாலை விதிமீறல் தொடர்பாக 100 குற்றச்சாட்டுகள் மற்றும் ரூ.16,000 அபராதத்தொகையுடன் டிமிக்கி கொடுத்து வந்த கால் டாக்ஸி ஓட்டுநர், காசிபௌலி அருகே சமீபத்தில் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.