ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

5 ஆண்டுகள் சட்டப்போராட்டம்: கணவர் மரணத்துக்கான ரூ.55 லட்சம் ஆயுள் காப்பீட்டை 'வென்றெடுத்த மனைவி'

கணவரின் மரணத்துக்கான ரூ.55 லட்சம் ஆயுள் காப்பீட்டை 5 ஆண்டுகள் சட்டப்போராட்டத்துக்கு பின் மனைவி வென்றெடுத்தார். 

News image
Updated On :7 மார்ச் 2019, 3:25 pm

கணவரின் மரணத்துக்கான ரூ.55 லட்சம் ஆயுள் காப்பீட்டை 5 ஆண்டுகள் சட்டப்போராட்டத்துக்கு பின் மனைவி வென்றெடுத்தார். 

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கிளையில் முதன்மை மேலாளராக பணியாற்றி வந்த திருமுருகன் (57), சென்னையின் பெரும்பாக்கம் அருகே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் வேன் மோதி உயிரிழந்துள்ளார்.

ஆனால், அவருடைய ஆயுள் காப்பீட்டை வழங்க காப்பீடு நிறுவனம் மறுத்துள்ளது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்த அவரது மனைவி ஷென்பக தேவி, அதில் குறிப்பிட்டதாவது, எனது கணவரின் வருமானத்தில் தான் எங்கள் குடும்பம் நடைபெற்று வந்தது. காலை நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது அவர் மீது வேன் மோதியது.

உடனடியாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கு அந்த விபத்து தான் முக்கிய காரணம் என்றிருந்தது. ஆனால், விபத்துக்கு வேன் காரணமில்லை. அவர் சாலை விதிகளை மதிக்காமல் சென்றதுதான் காரணம் எனக்கூறி நியூ இந்தியா அஷுரன்ஸ் காப்பீடு நிறுவனம் அதற்கு மறுப்பு தெரிவித்து வந்தது.

இந்நிலையில், நீதிபதி செல்வகுமார் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில், விபத்தில் உயிரிழந்த திருமுருகனின் மனைவி மற்றும் மகன் ஆகியோரிடம் ரூ.55 லட்சம் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க உத்தரவிடப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.