விமானப் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் மாற்றியமைத்தல் நிறுவனமான மும்பை ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட் காலியாக உள்ள 370 விமான தொழில்நுட்ப வல்லுநர், ஏவியோனிக்ஸ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Aircraft Technician(Maintenances & Overhaul shops)
காலியிடங்கள்:199
சம்பளம்: மாதம் ரூ.25000
வயது வரம்பு: 01.03.2023 தேதியின் படி 35-க்குள் இருக்க வேண்டும்
தகுதி: Aircraft Maintenances Engineering பாடத்தில் டிப்ளமோ முடித்து 1 ஆண்டு Aircraft Maintenances Technician பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Mechanica, Aeronautical Engineering-ல் 3 ஆண்டு டிப்ளமோ படிப்பை முடித்து Aircraft Maintenances துறையில் 1 ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
பணி: Aircraft technician(Avionics)
காலியிடங்கள்: 97
சம்பளம்: மாதம் ரூ.25000
வயது வரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
தகுதி: Aircraft Maintenances Engineering பாடத்தில் டிப்ளமோ படிப்பை முடித்து 1 ஆண்டு Aircraft Maintenances Technician பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Electrical, Elecronics, Telecommunication, Radio, Instrumentation பாடப்பிரிவுகள் ஏதாவதொன்றில் 3 ஆண்டு டிப்ளமோ படிப்பை முடித்து Aircraft Maintenances துறையில் தொழில் பழகுநர் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
பணி: Technician
காலியிடங்கள்: 74
சம்பளம்: மாதம் ரூ.25,000
வயது வரம்பு: 1.3.2023 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்து Avionics துறையில் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது சம்மந்தப்பட்ட பிரிவில் இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இதுகுறித்து விவரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் ரூ.500. இதர பிரிவினர் ரூ.1,000. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.aiesl.in/careers என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.03.2023
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவு

திருச்சி - தாம்பரம் இடையே நாளை (ஏப். 26) சிறப்பு ரயில்!

225 இடங்களைக் கைப்பற்றி பாஜகவை வேரறுப்போம்: திரிணமூல் காங்கிரஸ்

ஸ்ரீநகர் - லே தேசிய நெடுஞ்சாலையில் பனிச்சரிவு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


