டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

நாளை மாபெரும் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் எங்கு நடக்கிறது தெரியுமா?

இளைஞர்கள் வேலைவாய்ப்பினை பெறுவதற்கு வழிவகை செய்யும் விதமாக, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் சார்பில் தனியார்  வேலைவாய்ப்பு முகாம்கள்

News image
Updated On :19 ஜனவரி 2023, 8:14 am


இளைஞர்கள் வேலைவாய்ப்பினை பெறுவதற்கு வழிவகை செய்யும் விதமாக, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் சார்பில் தனியார்  வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை ஏற்பாடு செய்துள்ளது. 

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜன.18) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தனியாா் நிறுவனங்களும்-தனியாா் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரா்களும் நேரடியாக சந்திக்கும் வேலைவாய்ப்பு முகாம், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமை நடைபெறும்.

அதன்படி, இந்த மாதத்திற்கான வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. எனவே, தனியாா் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபா்களை அவா்களது நிா்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தோ்வு செய்து கொள்ளலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவா்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள், ஐடிஐ, டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல் மற்றும் வணிகவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள், செவிலியர், பொறியியல் பட்டதாரிகள் பங்கேற்கலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.