சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டின்கீழ் செயல்படும் சுகாதாரத் துறையில் ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணி இடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 19 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Auxiliary Nurse Midwife
காலியிடங்கள்: 183
சம்பளம்: மாதம் ரூ.14,000
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் இரண்டு ஆண்டு ஏஎன்எம் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
பணி: Pharmacist
காலியிடங்கள்: 4
சம்பளம்: மாதம் ரூ.15,000
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் மருந்தாளுனர் பிரிவில் இரண்டு ஆண்டு டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.
பணி: Lab Technician
காலியிடங்கள்: 19
சம்பளம்: மாதம் ரூ.13,000
தகுதி: பிளஸ் தேர்ச்சியுடன் லேப் டெக்னீசியன் படிப்பில் இரண்டு ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: X - Ray Technician
காலியிடங்கள்: 7
சம்பளம்: மாதம் ரூ.12,000
தகுதி: இரண்டு ஆண்டு எக்ஸ்-ரே டெக்னீசியன் படிப்புபடிப்பை முடித்திருக்க வேண்டும்.
பணி: Operation Theatre Assistant
காலியிடங்கள்: 5
சம்பளம்: மாதம் ரூ.8,400
தகுதி: ஆபரேஷன் தியேட்டர் டெக்னாலஜி டிப்ளமோ அறுவை சிகிச்சை டெக்னாலஜி பிரிவில் இரண்டு ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: Ophthalmic Assistant
காலியிடங்கள்: 3
சம்பளம்: மாதம் ரூ.12,000
தகுதி: கண் மருத்துவ உதவியாளர் படிப்பில் இரண்டு ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதி, பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு தேர்வு பணிக்கு செய்யப்படுவர்.
நேர்முகத் தேர்வுக்கு வருவோர் அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை கொண்டுவர வேண்டும். மருத்துவ படிப்பை தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Member Secretary, Chennai City Urban Health Mission, Public Health Department, Ripon Buildings, Chennai - 600003
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 19.1.2023
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பங்கள் பெறுவதற்கு இங்கே கிளிக் செய்யவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?

துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கைது! அமெரிக்கா உலகின் தலைசிறந்த ராணுவம்: டிரம்ப் பேச்சு
டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடி
தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


