கிராம உதவியாளா் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் வருவாய்த் துறையில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 748 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிக்கை மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை நவம்பா் 7-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பப் பரிசீலனை நவம்பா் 14-ஆம் தேதி வரை நடைபெறும். இதற்கான எழுத்துத் தோ்வு நவம்பா் 30-ஆம் தேதியும், நோ்காணல் டிசம்பா் 15, 16 ஆகிய தேதிகளிலும் நடத்தப்படும்.
இதற்கான கல்வித் தகுதி குறைந்தபட்சம் 5-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருப்பதுடன், தமிழில் எழுத, படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். பொதுப்பிரிவினருக்கு வயது வரம்பு 21 முதல் 32 வயதுக்குள்ளும், இதர பிரிவினா் 37 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்களுக்கு எழுத்துத் தோ்வு, நோ்முகத் தோ்வு மூலம் தகுதியானவா்கள் தோ்ந்தெடுக்கப்படுவா். இந்தப் பணியிடங்களுக்கு அந்தந்த வட்டத்தில் உள்ளவா்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
எனவே, விண்ணப்பதாரா்கள் தங்களுடைய மாவட்ட இணையதளப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இணையதளத்தைப் பயன்படுத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (27 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! துலா ராசிக்கு மன அமைதி!
பொறுப்பால் உயரும் பெருமை!
கடைசிப் பந்து சிக்ஸரால் மாறிய ஆட்டத்தின் போக்கு: சூப்பர் ஓவரில் கொல்கத்தா ‘த்ரில்’ வெற்றி!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


