தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் பணிகள்: விண்ணப்பிக்க இன்றே கடைசி
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் குறித்து....

தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் பணிகள் - கோப்புப்படம்
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள உதவிப் பேராசிரியர் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து அக்.29-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அதன் விவரம் வருமாறு:
விளம்பர எண்: அ1 /1311 / 2026 / நாள் : 13.10.2026.
பணி: இசைத் துறை
பிரிவு: குரலிசை
தகுதி: இசை பாடப் பிரிவில் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். நெட் அல்லது செட் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.
பிரிவு: பரதநாட்டியம்
தகுதி:பரதநாட்டியப் பாடப்பிரிவில் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். நெட் அல்லது செட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: கல் வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை (தொல்லியல்)
தகுதி: வரலாறு மற்றும் தொல்லியல், பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் பாடப்பிரிவில் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் தேர்ச்சியுடன் நெட் அல்லது செட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: கல்வியியல் மற்றும் மேலாண் மையியல் துறை (ஆங்கிலம்)
தகுதி: 55 சதவீத மதிப்பெண்களுடன் ஆங்கிலப் பாடத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் முதுநிலை கல்வியியல் பாடத்தில் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருத்தல் வேண்டும். நெட், செட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மேற்கண்ட பணிகளுக்கு தொகுப்பூதியம்: ரூ.30,000 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ. 200. இதர பிரிவினருக்கு ரூ.100. இதனை டி.டி.யாக எடுக்கவும்.
டி.டி. எடுக்க வேண்டிய முகவரி: பதிவாளர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
விண்ணப்பிக்கும் முறை: www.tamiluniversity.ac.in என்ற இணையதளத்தில்கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதைப் பூர்த்தி செய்து, தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து 29.10.2026 கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: பதிவாளர் (பொ), தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - 613 010.
Assistant Professor positions at Tamil University, Thanjavur: Today is the last day to apply
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


