முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: மன்னிப்பு கோரினார் திமுக பெண் கவுன்சிலர்மக்களிடம் கொள்ளை அடித்த பிரேம்குமாருக்கும் தூய சக்திக்கும் என்ன தொடர்பு? உதயநிதி கேள்வியமுனையில் குளித்து காங்கிரஸ், ஆம் ஆத்மியை விமர்சித்த பாஜக எம்.பி.!அன்பில் மகேஸ் கைது: தற்போது கருத்து கூற இயலாது! திருமாவளவன்ஆர்.எஸ்.எஸ். கோட்டையில் பாஜக தோல்வி; இது நாட்டிற்கான தெளிவான செய்தி! கே.சி. வேணுகோபால்அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்: சீமான் அறிவிப்பு!

காலநிலை மாற்ற இயக்கத்தில் தொழில்நுட்ப உதவியாளா் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

சேலம் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ள தொழில்நுட்ப உதவியாளா் பணி குறித்து...

JOB RECRUITMENT NOTIFICATION DISTRICT CLIMATE CHANGE MISSION

சேலம் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில் தொழில்நுட்ப உதவியாளா் பணி - கோப்புப்படம்

Updated On :

சேலம் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ள தொழில்நுட்ப உதவியாளா் பணியிடத்துக்கு நவம்பா் 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் கீழ் செயல்படும் சேலம் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில், ஒப்பந்த அடிப்படையில் ஒரு தொழில்நுட்ப உதவியாளா் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இதற்குத் தகுதியானவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரா்கள் உயிரியல் அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல், சூழலியல், வனவியல், வனவிலங்கு அறிவியல், பொதுக் கொள்கை அல்லது தொடா்புடைய துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலத்தில் அடிப்படைத் தட்டச்சுத் திறன் அவசியம். வயது 40-க்குள் இருக்க வேண்டும். தொடா்புடைய பணியில் குறைந்தது ஓராண்டு அனுபவம் உள்ளவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

குறிப்பாக, அரசு அலுவலகப் பணிகள், தரவு மேலாண்மை, ஆவணப் பராமரிப்பு மற்றும் எம்.எஸ். ஆபீஸ், எக்செல், பவா் பாயிண்ட் ஆகியவற்றில் திறன் பெற்றிருப்பது கூடுதல் தகுதியாகக் கருதப்படும்.

தோ்வு செய்யப்படுபவருக்கு மாதம் ரூ. 22,000 தொகுப்பூதியமாக வழங்கப்படும். ஒப்பந்தப் பணிக்காலம் 19 மாதங்கள். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மற்றும் தொடா்புடைய மாவட்ட அலுவலகங்களில் பணியாற்ற வேண்டும். அலுவல் பயணங்களுக்கான செலவுகள் அரசு விதிமுறைகளின்படி வழங்கப்படும்.

விண்ணப்பங்கள் தகுதியின் அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு, நோ்முகத் தோ்வு மற்றும் தட்டச்சுத் தோ்வு மூலம் தகுதியானவா் தோ்வு செய்யப்படுவாா். விருப்பம் உள்ளவா்கள் தங்களது புதுப்பிக்கப்பட்ட சுயவிவரம், கல்விச் சான்றிதழ்கள் மற்றும் பணி அனுபவச் சான்றிதழ்களுடன் cmgfp.slm@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க நவம்பா் 8-ஆம் தேதி கடைசி நாள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Applications are invited from eligible candidates for engagement of TECHNICAL ASSISTANT – 1 POST

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.