ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

புதுச்சேரியில் ஆகஸ்ட் 1 முதல் 10 வரை இந்திய ராணுவ அக்னிவீர் ஆள்சேர்ப்பு முகாம்

புதுச்சேரியில் வரும் ஆகஸ்ட் 1 முதல் 10-ஆம் தேதிவரை நடைபெறவுள்ள அக்னிவீர் ஆள்சேர்ப்பு முகாம் குறித்து...

Indian Army Agniveer recruitment

புதுச்சேரியில் வரும் ஆகஸ்ட் 1 முதல் 10-ஆம் தேதிவரை நடைபெறவுள்ள அக்னிவீர் ஆள்சேர்ப்பு முகாம் - கோப்புப்படம்

Published On :22 ஜூலை 2026, 2:08 pm IST

இந்திய ராணுவத்தில் அக்னிவீர் பணியில் இணைய கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஆன்லைன் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான ஆள்சேர்ப்பு முகாம் புதுச்சேரியில் வரும் ஆகஸ்ட் 1 முதல் 10-ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது.

ராணுவத்தின் சென்னை ஆள்சேர்ப்பு மண்டலத் தலைமையகம், சம்பந்தப்பட்ட மாநில நிர்வாகங்களின் உதவியுடன் இந்த முகாம் நடைபெறுகிறது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய தமிழ்நாட்டைச்சேர்ந்த 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் புதுச்சேரி மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்காக இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், சிப்பாய்-மருந்தாளுநர், சோல்ஜர் என்.ஏ/என்.ஏ (கால்நடை மருத்துவம்), ஹவில்தார் (கல்வி) மற்றும் சமய ஆசிரியர் - ஜூனியர் கமிஷன்டு அதிகாரி ஆகிய பிரிவுகளுக்கு தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த, ஆன்லைன் தேர்வில் தகுதிபெற்ற அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

கடந்த ஜூன் 1 முதல் 12 வரை நடத்தப்பட்ட இணையவழி பொது நுழைவுத் தேர்வின் முடிவுகள் ஜூலை 13 ஆம் தேதி இந்திய ராணுவ (Join Indian Army) இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இதில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்கத் தகுதியுடையவர்கள்; இதற்கான அனுமதி அட்டை அவர்களுக்கு விரைவில் வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் ஆள்சேர்ப்பு செயல்முறையின் இரண்டாம் கட்டத்திற்குத் தாமதமின்றித் தயாராகுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இரண்டாம் கட்டத்தில் உடல் தகுதித் தேர்வு, உடல் அளவீட்டுத் தேர்வு, மருத்துவப் பரிசோதனை ஆகியவை அடங்கும். ஆள்சேர்ப்பு முகாமின் போது ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க, அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள், இருப்பிடச் சான்றிதழ், ஆதார் அட்டை, புகைப்படங்கள், என்.சி.சி அல்லது விளையாட்டுச் சான்றிதழ்கள் இருப்பின் அவை மற்றும் பிற அடிப்படை ஆவணங்கள் அனைத்தையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.

ஆட்சேர்ப்பு செயல்முறை நியாயமானது, வெளிப்படையானது மற்றும் முற்றிலும் தகுதி அடிப்படையிலானது என்று இந்திய ராணுவம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

மேலும், ஆட்சேர்ப்பு செய்வதாக உறுதியளிக்கும் தரகர்கள் அல்லது நேர்மையற்ற நபர்களிடம் விண்ணப்பதாரர்கள் ஏமாற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தில் தேர்வு என்பது, தகுதி மற்றும் செயல்திறனை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது என்பதை நினைவில் கொள்ளவும்.

Summary

Indian Army Agniveer recruitment rally in Puducherry from August 1 to 10

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.